IPL 2023 தொடரில் கிடைத்த வருவாய் எவ்வளவு? BCCI -க்கு கிடைத்த பல்லாயிரம் கோடிகள்
ஐபிஎல் 2023 தொடரின் மூலம் பிசிசிஐக்கு எவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
IPL 2023 தொடரில் கிடைத்த வருவாய்
ஐபிஎல் 2022 தொடரின் மூலம் பிசிசிஐக்கு ரூ.6,404.25 கோடி வருவாய் கிடைத்தது. அதேபோல, 2023 -ம் ஆண்டு 116 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் 2023 தொடரின் மூலம் பிசிசிஐக்கு ரூ.11,769 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதாவது, முந்தைய ஆண்டை விட ரூ.5,120 கோடி வருவாய் அதிகமாக கிடைத்துள்ளது.
அதேபோல, ஐபிஎல் வருவாய் அதிகரித்துள்ள நிலையில் செலவும் அதிகரித்துள்ளது. அதாவது கடந்தாண்டை விட 66% அதிகமாகி ரூ.6,648 கோடியாக அதிகரித்துள்ளது.
2023 முதல் 2027 ம் ஆண்டு வரையிலான ஐபிஎல் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் ரூ.48,390 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதில் ஐபிஎல் தொலைக்காட்சி உரிமையை டிஸ்னி ஸ்டார் ரூ.23,575 கோடிக்கும், டிஜிட்டல் உரிமையை ஜியோசினிமா ரூ.23,758 கோடிக்கும் வாங்கியுள்ளது.
அந்தவகையில் ஐபிஎல் 2023 தொடரின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமையின் வருவாய் ரூ.8,744 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வருவாய் முந்தைய ஆண்டில் ரூ.3,780 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |