பிரித்தானியாவில் பரவிவரும் ‘Super Flu’ என்பது என்ன? சில பயனுள்ள தகவல்கள்
பிரித்தானியாவில், ‘Super Flu’ என அழைக்கப்படும் ப்ளூ காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது.
இந்த ’Super Flu’ என்பது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
’Super Flu’ என்பது என்ன?
ப்ளூ என அழைக்கப்படும் Influenza காய்ச்சல், Influenza வைரஸ் என்னும் வைரஸ் மூலம் பரவுகிறது. இந்த Influenza வைரஸில், A,B,C மற்றும் D என நான்கு வகைகள் உள்ளன.
அவற்றில், இந்த A,B வைரஸ்கள் பொதுவாக குளிர் காலத்தில் ப்ளூ காய்ச்சலை உருவாக்கும்.

அவற்றில் Influenza A வைரஸ்தான் தற்போது தொற்று பரவலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்த Influenza A வைரஸிலும் பல துணைப்பிரிவுகள் உள்ளன.
அவற்றில், H3N2 என்றொரு வகை வைரஸ் உள்ளது. அந்த Influenza A H3N2 வைரஸின் subclade K என்னும் மரபணு மாறுபாடே சூப்பர் ப்ளூ என அழைக்கப்படுகிறது.
ப்ளூ காய்ச்சலின் அறிகுறிகள்
அதிக காய்ச்சல், உடல் நடுக்கம், கடுமையான உடல் வலி, தொடர் மற்றும் நீண்ட நாள் இருமல், தலைவலி, தொண்டை அழற்சி, மூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் வடிதல், களைப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி.
சூப்பர் ப்ளூவின் அறிகுறிகள்
ப்ளூ காய்ச்சலின் அறிகுறிகளுடன் கூட, மூச்சுத்திணறல் அல்லது மூச்சு விட கஷ்டமாக இருத்தல், மார்பு வலி, குழப்பம், கடும் நீரிழப்பு மற்றும் அறிகுறிகள் திடீரென மோசமாதல் ஆகியவை கவனிக்கவேண்டிய சூப்பர் ப்ளூவின் அறிகுறிகள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிரித்தானியாவில் சூப்பர் ப்ளூ பரவல்
பிரித்தானியாவைப் பொருத்தவரை, இந்த வார நிலவரப்படி, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, ப்ளூ தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 56 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
நாளொன்றிற்கு 2,660 பேர் சராசரியாக ப்ளூ காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
நிலைமை இன்னும் மோசமாகலாம் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், பிரித்தானியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டால், வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்துகொள்ளுமாறும், தடுப்பூசி பெறாதவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறும், மருத்துவர்கள் அறிவுறுத்திவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |