ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்தது: அடுத்து என்ன?

By Balamanuvelan Nov 09, 2024 12:26 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மனியில், ஆளும் கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக கூட்டணி உடைந்ததது.

ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்தது

ஜேர்மனியில், SPD, The Greens மற்றும் FDP ஆகிய கட்சிகள் இணைந்தே கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன.

இந்நிலையில், கூட்டணிகளுக்குள் கொள்கை கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது. ஜேர்மன் அரசில் FDP கட்சியைச் சேர்ந்தவரான Christian Lindner நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார்.

ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்தது: அடுத்து என்ன? | What Next For Germany After Government Collapse

அவருக்கும் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸுக்கும் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக, திடீரென Christian Lindnerஐ அவரது பதவியிலிருந்து நீக்கினார் சேன்ஸலர்.

அதைத் தொடர்ந்து, FDP கட்சி, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளது, அதனால், ஆளும் கூட்டணி உடைந்தது.

முடிக்கவேண்டிய அவசர வேலைகள்

கூட்டணியிலிருந்து FDP கட்சி விலகினாலும், மீதமுள்ள, ஓலாஃப் ஷோல்ஸ் சார்ந்த SPD கட்சியும் , The Greens கட்சியும் இணைந்து, ஏற்கனவே துவக்கப்பட்டுள்ள சில முக்கிய வேலைகளை முடிக்க திட்டமிட்டுள்ளன.

விடயம் என்னவென்றால், அவற்றில் பட்ஜெட் தாக்கல் செய்வதும் ஒன்றாகும். பெரும்பான்மை இல்லாமல் ஷோல்ஸ் எப்படி பட்ஜெட் தாக்கல் செய்யப்போகிறார் என்பது தெரியவில்லை!

ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்தது: அடுத்து என்ன? | What Next For Germany After Government Collapse

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

1. நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு

ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப், தன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ளவேண்டும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு, ஜனவரி மாதம் 15ஆம் திகதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. நாடாளுமன்றம் கலைப்பு

ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறும் பட்சத்தில், அதாவது, அவருக்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கவில்லையானால், அவர் பெடரல் ஜனாதிபதியான Frank-Walter Steinmeierஇடம், நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைப்பார்.

அரசு நீடிக்க இயலாது என தெரியவரும் பட்சத்தில், தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில், 21 நாட்களுக்குள் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைப்பார்.

3. முன்கூட்டியே தேர்தல்

வழக்கமாக ஜேர்மனியில் செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், இம்முறை முன்கூட்டியே மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும்.

4. புதிய அரசு

அடுத்ததாக அமையும் ஆட்சி வித்தியாசமான கூட்டணிகளைக் கொண்டிருக்கும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கூட்டணியிலிருந்து அகற்றப்பட்ட FDP கட்சிக்கு போதுமான வாக்குகள் கிடைக்காது என்றும், அதனால், CDU/CSU மற்றும் SPD கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமையலாம் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

விடயம் என்னவென்றால், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்குப் பின், அரசு அமைக்க கூட்டணிக் கட்சிகள் 71 நாட்கள் எடுத்துக்கொண்டன.

இம்முறையும், அதேபோல நடந்தாலும் ஆச்சரியமில்லை என்கின்றன உள்ளூர் ஊடகங்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US