விஜய்யிடம் சிபிஐ விசாரணையில் என்ன கேட்கப்பட்டது? உச்சநீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் செக்
தவெக தலைவர் விஜய்யிடம் இன்று நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
விஜய்யிடம் சிபிஐ விசாரணை
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட வேண்டுமென தவெக மனு தாக்கல் செய்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த சில மாதங்களாக விசாரணையை நடத்தி வரும் சிபிஐ, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், தவெக நிர்வாகிகள் உட்பட 200க்கும் அதிகமானோரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, வெக தலைவர் விஜய்யை விசாரிக்க இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பப்பட்டது.
இதன்படி, இன்று தனி விமானம் மூலம் டெல்லி வந்த தவெக தலைவர் விஜய், பலத்த பாதுகாப்புடன் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு சென்றார்.

காலை 11:15 மணியளவில் விஜய்யிடம் தொடங்கிய விசாரணை, மாலை 4:30 மணி வரை நடைபெற்றுள்ளது.
என்ன கேட்கப்பட்டது?
இதில் 4 சிபிஐ அதிகாரிகள், கரூர் நிகழ்வு தொடர்பாக பல்வேறு கேள்விகளை விஜய்யிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது முதலில், கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை, அவருக்குத் தெரிந்தபடி, விவரிக்குமாறு விஜய்யிடம் கேட்டுள்ளனர்.

அதன் பின்னர், நிகழ்விற்கு தாமதமாக வந்தது ஏன்? விபரீதமான பின்னர் அந்த இடத்தை விட்டு சென்றது ஏன்? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விஜய் மட்டுமல்லாது தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூர் துயர சம்பவம் நடைபெற்ற பிறகு, டேவிட்சன் தேவாசீர்வாதம் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அப்போதே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி விளக்கமளித்தார்.
தணிக்கை வாரியம் செக்
ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.

விஜய் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜரான அதே நேரத்தில், ஜனநாயகன் தொடர்பான மேல்முறையீடு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மேல்முறையீடு வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என தணிக்கை வாரியம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |