கலர் மாறுகிறது.. Freeze ஆகிறது.. iPhone 15 -ல் என்ன தான் பிரச்சனை: புலம்பும் வாடிக்கையாளர்கள்
ஆப்பிளின் புதிய ஐபோன் 15 சீரீஸ் மாடலில் உள்ள முக்கியமான 3 பிரச்சனையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
பிரச்சனை - 1
ஐபோன் 15 சீரீஸ் முதல் பிரச்சனை செட்டப் பக் (Setup Bug) ஆகும். அதாவது, நீங்கள் உங்களுடைய பழைய ஐபோனில் இருந்து நேரடியாக டேட்டாவை (Directly transfer data) இந்த புதிய போனிற்கு மாற்றும் போது ஐபோன் 15 ப்ரீஸ் (Freeze) சிக்கலை சந்திக்க நேரிடுகிறது.
இதனை சரிசெய்வதற்கு ஆப்பிள் நிறுவனம் சிறிய ஃபார்ம்வேர் அப்டேட்களை (iOS 17.0.1 மற்றும் iOS 17.0.2 Firmware updates) வெளியிட்டுள்ளது.
அதற்கு நீங்கள், செட்டிங்ஸ் > ஜெனரல் > சாஃப்ட்வேர் அப்டேட் (Settings > General > Software Update) என்பதற்கு சென்று உங்கள் ஃபார்ம்வேர் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம்.
பிரச்சனை - 2
இந்த இரண்டாவது பிரச்சனையானது ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) போன்களை தொடர்புடையது. வாடிக்கையாளர் இது பற்றி புகார் கூறும் போது, இந்த ப்ரோ மாடல்களின் புதிய டைட்டானியம் பூச்சானது கைரேகை கறைகளை (Fingerprint smudges) பெறுகிறது எனக் கூறினார்.
இதற்கு ஆப்பிள் நிறுவனம் தரப்பில், "புதுப்பிக்கப்பட்ட சப்போர்ட் பேஜ் (Updated Support Page) வழியாக, உங்களது தோலில் இருந்து வரும் எண்ணெய் ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) போன்களை தற்காலிகமாக நிறத்தை மாற்றக்கூடும்.
அதற்கு, மென்மையான, ஈரமான துணியை பயன்படுத்த வேண்டும் அல்லது ப்ரொடெக்டிவ் கேஸிற்க்குள் (Protective Case) போனை வைக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
பிரச்சனை - 3
மூன்றாவது பிரச்சனை என்பது குவாலிட்டி கண்ட்ரோல் (Quality Control). இந்த பிரச்சனையானது ஆதாரங்களை மட்டும் அடிப்படையாக கொண்டது. இதற்கு, ஆப்பிள் நிறுவனம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை.
Some iPhone 15 Pro units appear to have display misalignment, dirt on the camera lenses, scratches on the screen and signs of damage in various areas, there are reports of bubbles and discolored squares. This happens for units destined for the US, Chinese and EU markets pic.twitter.com/8Peh0zoaZs
— Majin Bu (@MajinBuOfficial) September 23, 2023
டிஸ்பிளே சரியாக இல்லாமலும், டெலிஃபோட்டோ கேமரா லென்ஸின் உள்ளே தூசி (Dust inside telephoto camera lens) மற்றும் காஸ்மெட்டிக் சேதத்தின் அறிகுறிகள் இருந்தும், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் குறைபாடுகளுடன் வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |