பாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?
பொதுவாக பாம்பு என்றாலே எல்லோரது மனதிலும் ஒரு பயம் வருவது சகஜம் தான்.
பாம்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ஊது சுருட்டை, வளனை, சாரை, தண்ணீர் பாம்பு, கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம், சுண்டக்கருவினை, சாரை என்று பல வகை இருக்கின்றன.
அதுமட்டுமின்றி இவற்றில் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு விஷமுள்ள பாம்புகளும் உள்ளன. இவை கடித்து விட்டால் அடுத்து என்ன செய்வது என்று பதற்றம் பலரிடையே காணப்படும்.
- அந்தவகையில் பாம்பு ஒருவரை கடித்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை காண்போம் எந்த இடத்தில் அந்த நபரை பாம்பு கடித்ததோ அங்கிருந்து உடனடியாக அவர் வெளியேற வேண்டும்.
- பாம்பு கடித்த உடல் பாகத்தின் அருகே மோதிரம், வளையல், காப்பு, பிரேஸ்லெட் உள்ளிட்ட எதையேனும் அணிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். ஏனென்றால் கடிபட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் இவற்றின் காரணமாக அபாயம் ஏற்படலாம்.
- பாம்பு கடித்த உடல் பாகம் அருகே இறுக்கமாகக் கட்டக் கூடாது. அப்படி இறுக்கமாக இருந்தால் ரத்த ஓட்டம் தடைபடும்.
- பாம்பு கடித்த இடத்தில் வீக்கத்தை உண்டாக்காமல் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மையுள்ள பாம்புகளின் கடிகளுக்கு மட்டும் கை அல்லது கால் விரல்களில் இருந்து கடிபட்ட இடம் மற்றும் அதற்கும் மேல் பேண்டேஜ் அல்லது எலாஸ்டிக் சுற்றி நச்சு உடலின் பிற பாகங்களுக்கு பரவாமல் தடுக்கலாம். ஆனால், ரத்த ஓட்டம் தடைபடும் அளவுக்கு மிகவும் இறுக்கமாக இருக்கக் கூடாது. தசைப் பிடிப்புக்கு ஒட்டப்படும் பேண்டேஜின் இறுக்கமே போதுமானது.
- கடிபட்டவர் இயன்றவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டும்.
- பாரம்பரிய மருத்துவ முறை எனும் பெயரில் அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கக்கப்படாத அல்லது ஆபத்தை விளைவிக்கக் கூடிய எந்த வகையான முதலுதவி சிகிச்சையையும் செய்யக்கூடாது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.