உலகத்திலேயே மிக விலையுயர்ந்த ஆபரணம் எது தெரியுமா? அது வைரம் அல்ல
உலகத்திலேயே மிக விலையுயர்ந்த ஆபரணம் எது என்ற தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எந்த ஆபரணம்
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ஆபரணம் என்றால் தங்கம், வைரம் என்று நினைக்கிறோம். ஆனால், அவற்றை விட ரத்தின கற்கள் தான் மிகவும் விலையுயர்ந்தவை ஆகும்.
பூமியின் பல பகுதிகளில் தாதுக்கள் மற்றும் கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இதில் தாதுக்களை தங்கமாக மாற்றுகின்றனர். அமெரிக்க புவியியல் சங்கத்தின் கூற்றுப்படி பார்த்தால் கனிமத்தில் கார்பன் இல்லை.
பூமியில் உள்ள அரிதான கனிமம் 'கியாவ்துயைட்' ஆகும். இது மியான்மரில் மட்டும் ஒரே ஒரு படிகம் கிடைத்தது. கடந்த 2015-ம் ஆண்டில் மியான்மரின் உள்ள சாங் கி பள்ளத்தாக்கில் சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு சிறிய படிகத்தை கண்டறிந்தனர்.
இதனை டாக்டர் கியாவ் து என்ற ஆய்வாளர் ஆராய்ந்த போது தான் புதிய கனிமமாக அறிவிக்கப்பட்டது. டாக்டர் கியாவ் துவின் கண்டுபிடிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக அதற்கு அவரின் பெயர் வைத்து சூட்டப்பட்டது.
ஒரே ஓரு மாதிரி மட்டுமே இருக்கும் இதன் எடை 1.61 காரட், சுமார் 0.3 கிராம் ஆகும். இந்த கனிமமானது இது பிஸ்மத் (Bi), ஆன்டிமனி (Sb) மற்றும் ஆக்ஸிஜன் (O) ஆகியவற்றால் ஆனது.
இந்த 'கியாவ்துயைட்' லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது விற்பனைக்கு அல்ல.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |