உடற்பயிற்சி செய்ய முடியாத நாட்களில் என்ன செய்தால் அதன் பலனை பெற முடியும்?
Exercises
By Kishanthini
பொதுவாக உடற்பயிற்சி செய்வது நம்முடைய உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால் எல்லா நாளும் நமக்கு உடற்பயிற்சிகள் செய்கிற மனநிலை இருக்காது.
அதுபோன்ற நாட்களிலும் உங்களுடைய ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக் கொள்ள சில பழக்க வழக்கங்களைப் பின்பற்றலாம்.
தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- அதிக அளவில் சிட்ரஸ் பழங்கள் முழு தானியங்கள், காய்கறிகள், நட்ஸ் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
- நட்ஸ், மீன் வகைகள், அவகேடோ போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே இவற்றை எடுத்து கொள்வது நல்லது.
- குறைந்தது ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.
- உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
- மனதுக்குப் பிடித்த இசையைக் கேட்கலாம். இது நம்முடைய உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் என்று சொல்லப்படுகிற டோபமைன் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும். இதனால் மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவை குறைய ஆரம்பிக்கும்.
- வேறு வேலைகள் இருந்தாலும் குறைந்தபட்சம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கான உடல் செயல்பாடுகள் மிக அவசியம்.
- நடைப்பயிற்சி, ஜாகிங், வீட்டுக்குள்ளேயே சைக்கிளிங் செய்வது, சின்ன சின்ன ஏரோபிக் பயிற்சிகள், வீட்டு தோட்டத்தை பராமரிப்பு, உங்களுக்கு பிடித்தபடி நடனம் ஆடுவது போன்ற பயிற்சிகளை கடினமான உடற்பயிற்சி இல்லாத நாட்களில் மேற்கொள்ளலாம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US