விழுந்து நொறுங்கிய சீன விமானத்தில் இருந்த 132 பேரின் நிலை என்ன?: வெளியாகியுள்ள பயங்கர தகவல்
132 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த சீன விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவரும் எரிந்து சாம்பலாகிவிட்டதாக பயங்கர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சீன போயிங் 737-800 ரக விமானம் ஒன்று, நேற்று Wuzhou நகருக்கு அருகிலுள்ள மலைப்பகுதி ஒன்றில் விழுந்ததில் தீப்பற்றியுள்ளது. தீப்பற்றியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் சாம்பலாகிவிட்டதாகவும், அத்துடன், அந்த வனப்பகுதியும் பயங்கரமாக சேதமடைந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்று மீட்புப்பணிக்காக சென்ற மீட்புக்குழுவினர் விமானத்தின் சிதைந்த பாகங்களை மட்டுமே மீட்க முடிந்துள்ளது.
30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த அந்த விமானம், திடீரென மணிக்கு 350 மைல் வேகத்தில் தலைகீழாக நிலப்பகுதியை நோக்கி பாய்ந்துள்ளது.
அந்த விமானம் பயங்கரமாக விழுந்து நொறுங்கியதால் ஏற்பட்ட பயங்கர தீ, நாசா சேட்டிலைட் காட்சிகளில் இடம்பிடிக்கும் அளவுக்கு பெரியதாக இருந்துள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், மிக வேகமாக தலைகீழாக விமானம் விழுந்ததால், விமானத்திலிருந்த அனைவரும் சுயநினைவிழந்திருக்கலாம் என்றும், என்றாலும், விமானம் கீழே விழும் முன் திடீரென சுயநினைவைப் பெற்ற விமானி ஒருவர், விமானத்தைக் காப்பாற்ற முயன்றிருக்கலாம் என்றும் விமான நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.