சதம் விளாசிய பின் அபிஷேக் சர்மா காட்டிய துண்டு சீட்டு: அதில் என்ன எழுதி இருந்தது தெரியுமா?
அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட்டின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை துரத்தி பிடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஹைதராபாத் அணி அபார வெற்றி
நடப்பு ஐபிஎல் தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா(36), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்(82) மற்றும் அதிரடி வீரர் ஸ்டாய்னிஸ் (34) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் பஞ்சாப் 246 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா மிரட்டலான தொடக்கம் அமைத்து கொடுத்ததுடன் அணியை 9 பந்துகள் மீதம் இருக்கும் போதே வெற்றியை பெறும் நிலைக்கு எடுத்து சென்றனர்.
இந்த கிட்டத்தட்ட முதல் விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் குவித்து அசத்தினர்.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அபிஷேக் சர்மாவின் அதிரடி சதம்
பஞ்சாப் பந்து வீச்சை துவம்சம் செய்த அபிஷேக் சர்மா, 40 பந்துகளில் சதத்தை எட்டினார்.
சஹால் வீசிய 15 வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்ட அபிஷேக் சர்மா (141 ஓட்டங்கள், 10 சிக்சர்கள், 14 பவுண்டரிகள்), அர்ஷ்தீப் சிங் வேகத்தில் ஆட்டமிழந்தார்.
ரசிகர்களுக்காக துண்டு சீட்டு
இந்த போட்டியில் சதம் விளாசிய பிறகு உற்சாகத்தில் திளைத்த அபிஷேக் சர்மா, தனது பாக்கெட்டில் இருந்து ஒரு துண்டு சீட்டை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்களுக்கு காட்டினார்.
🧡
— SunRisers Hyderabad (@SunRisers) April 12, 2025
Abhishek Sharma | #PlayWithFire | #SRHvPBKS | #TATAIPL2025 pic.twitter.com/OaD4YQEmTT
அந்த சீட்டில் "இந்த ஒரு ஆட்டம் ஆரஞ்சு ஆர்மி ரசிகர்களுக்காக" என்று எழுதப்பட்டிருந்தது.
அபிஷேக் சர்மாவின் இந்த செயல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |