உலகம் என்னவாகும்?: 1972-லேயே துல்லியமாக கணித்த ஆய்வாளர்களின் கருத்து உண்மையாகும் அபாயம்
அமெரிக்க ஆய்வாளர்கள் சிலர் 1972ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்று, 21ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் சமுதாயம் நிலைகுலையும் என கணித்தது.
Massachusetts Institute of Technology (MIT) வெளியிட்ட அந்த ஆய்வை மக்கள் அப்போது கேலி செய்திருக்கிறார்கள். ஆனால், இப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று 1972இல் அமெரிக்க ஆய்வாளர்கள் கணித்தது உண்மையாகலாம் என கண்டறிந்துள்ளது.
Gaya Herrington என்ற ஆய்வாளர், 1972இல் MIT ஆய்வாளர்கள் கணித்த விடயங்கள் சரியானவையா என்பதைக் கண்டறியும் பணியை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வில் 10 முக்கிய விடயங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
மக்கள்தொகை, தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்கும் விடயங்கள், தொடரும் மாசு ஆகியவற்றை கவனித்த Gaya, அடுத்த பத்து ஆண்டுகளில் நமது பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
அதுவும், 2040 வாக்கில் சமுதாயம் மொத்தமாக நிலைகுலையும் என ஆய்வு முடிவுகள் அதிரவைக்கும் ஒரு தகவலைக் கொடுத்துள்ளன. MIT ஆய்வாளர்கள் Jerry Foster என்பவர் உருவாக்கிய World1 என்னும் ஒரு கணினி புரோகிராமை வைத்து 1900 முதல் 2060 வரையான சில விடயங்களை ஆராய்ந்தார்கள். அந்த ஆய்வின் முடிவுகள் ஒரு காகிதத்தில் கிராப் (graph lines) வடிவில் கிடைத்தன.
அந்த கிராப் மற்றும் அதற்கான விளக்கத்தை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம். அதாவது அந்த காகிதத்தில் P என்ற எழுத்து மக்கள்தொகையையும், Q என்ற எழுத்து வாழ்க்கைத் தரத்தையும், N என்ற எழுத்து இயற்கை வளங்களையும், Z என்ற எழுத்து காற்று மாசு முதலான மாசுக்களையும் குறிக்கின்றன.
Foster, அந்த கிராபின் அடிப்படையில், 1900இலிருந்து மக்கள் தொகை அதிகரிக்கும், வாழ்க்கைத்தரம் உயர்ந்து பின் கீழ் நோக்கிச் செல்லும், இயற்கை வளங்கள் பயன்படுத்தப்பட்டுவிடுவதால் அவையும் குறையும், காற்று மாசு முதலான மாசுக்கள் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளார்.
அவரது கணிப்பு இதுவரை மிகச் சரியாகவே இருந்துள்ளது. மக்கள்தொகை அதிகரித்துள்ளது, இயற்கை வளங்களை காலி செய்துவிட்டோம், மாசு அதிகரித்துவிட்டது. இதுபோக, அவர் 2040 வாக்கில் மொத்தமாக பொருளாதாரம் போன்ற விடயங்கள் வீழ்ச்சியடைந்து சமுதாயம் நிலைகுலைந்து விடும் என்றும் கணித்துள்ளார்.
ஆனால், நாம் பூமி மீதும் மக்கள் மீதும் அக்கறை காட்டினால், கடும் முயற்சி எடுத்தால், வளங்களை கொள்ளையிடுவதையும், நிலத்தடி நீரை பாழாக்குவதையும் வீணாக்குவதையும் கட்டுப்படுத்தினோம் என்றால், பிறகு Fosterஇன் கணிப்பை பொய்யாக்க நம்மால் நிச்சயம் முடியும்!