Whatsapp- செயலியில் வெளியான புதிய அப்டேட்: ஐ-போன் பயனர்களுக்கான சிறப்பு அம்சம்
வாட்ஸ் அப் செயலியில் கம்பேனியன் மோட் என்ற புதிய அம்சத்தின் மூலம், ஒரே சமயத்தில் வெவ்வேறு போன்களில் வாட்சப் செயலியை பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் செயலியில் அப்டேட்
வாட்ஸ் அப் செயலியில் கம்பேனியன் மோட் என்ற பெயரில் புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. வாட்ஸ் அப் செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அப்டேட் செய்வதன் மூலம், ஐ-போன் பயனர்களுக்கு கம்பேனியன் மோட் என்ற புதிய அம்சம் கிடைக்கும்.
@meta
இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் அதிகபட்சம் நான்கு ஐ-போன்களில், வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியும்.
புதிய கம்பேனியன் மோடு அம்சம் கொண்டு பயனர்கள் ஒற்றை கணக்கினை, அதிக ஐபோன்களில் லாக் இன் செய்து கொள்ளலாம்.
ஐ-போன் பயனர்களுக்கு சிறப்பம்சம்
இதன் மூலம் பிரைமரி சாதனங்களில் இணைய சேவை இல்லாத சமயத்திலும், வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த முடியும்.
@getty images
மேலும் இரண்டாவது ஐ-போனில் வாட்ஸ் அப் வீடியோ மற்றும் ஆடியோ ஆகியவற்றை மேற்கொண்டு, மற்ற அம்சங்களை இயக்கலாம்.
இவ்வாறு இதன் மூலம் நான்கு சாதனங்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தினாலும் , பாதுகாப்பான முறையில் பயன்படுத்தலாம் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.