Whatsappல் அட்டகாசமான புதிய அப்டேட்கள்! இனி இதையெல்லாம் செய்ய முடியும்
வாட்ஸ் அப்பில் புதிதாக அசத்தலான அப்டேட்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
வழக்கம் போல இந்த புதிய வாட்ஸ்அப் அம்சங்களும், அனைவரையும் சென்றடையும் முன், அதாவது அனைத்து வகையான பயனர்களுக்குமான பொது தளத்திற்கு செல்லும் முன் சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் - பீட்டா பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!
வாட்ஸ்அப் பிசினஸ் பீட்டாவை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இல் பயன்படுத்துபவர்களுக்காக மேம்பட்ட சேர்ச் பில்டர்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் காண்டாக்ஸ், நான்-காண்டாக்ஸ் மற்றும் அன்ரீட் உள்ளிட்ட ஸ்பெஷல் சேர்ச் பில்டர்கள் உங்கள் சாட்டில் அணுக கிடைக்கும்.
மெசேஜ் ரியாக்ஷன்களை இயக்குவதற்கும் முடக்குவதற்கும் ஐஓஎஸ் பீட்டாவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் சோதிக்கிறது. இந்த அம்சத்தை நீங்கள் செட்டிங்ஸ் > நோட்டிஃபிக்கேஷன்ஸ் என்பதன் கீழ் காணலாம்.
நீங்கள் டெஸ்க்டாப்பில் டார்க் தீம்-ஐ பயன்படுத்தும் போது, சாட் பபிள்ஸ்களுக்கான புதிய வண்ணங்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தப் போகிறது.
உலகளாவிய வாய்ஸ் நோட் பிளேயர் அம்சம் வந்துள்ளது. இந்த அம்சம், நீங்கள் வேறு சாட்டிற்கு மாறினாலும் கூட தொடர்ந்து வாய்ஸ் நோட்களை கேட்க உங்களை அனுமதிக்கும். இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டுக்கும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.