வடகொரியா அதிபர் கிம் மனைவிக்கு என்ன ஆச்சு? ரகசியத்திற்கு பின்னாள் ஒளிந்திருக்கும் காரணம்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் மனைவி ஒரு ஆண்டிற்கு மேலாக பொதுவெளியில் காணப்படாததால், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
உலகில் மர்மங்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் உள்ளது. இங்கு என்ன நடக்கிறது என்பதை அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ள முடியாது, அதை உறுதியாகவும் சொல்ல முடியாது.
அந்நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன்னோ அல்லது அந்நாட்டின் ஊடகங்களில் வந்தால் மட்டுமே அதை நாம் உறுதிபடுத்த முடியும்.
அந்தளவிற்கு வடகொரியாவின் ரகசியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வடகொரியா அதிபரின் மனைவியான Ri Sol-ju(32) கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பொது வெளியில் தென்படாமல் இருப்பது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Ri Sol-ju கடைசியாக கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ஆம் திகதி கிம் ஜாங் உன்னுடன், தலைநகர் பியோங்யாங்கில் இருக்கும் சந்திர புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன் பின் அவரை பொதுவெளியில் பார்க்க முடியவில்லை, இதனால் அவரைப் பற்றி அச்சம் நிலவியுள்ளது.கிம் ஜாங் உன் மற்றும் Ri Sol-ju கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
North Korean research division at Korea Insitute for National Unification (KINU)-ன் இயக்குனர் ஹாங் மின் இது குறித்து கூறுகையில், கிம் ஜாங் உன் மனைவி பொதுவெளியில் தென்பாடாமல் இருப்பதற்கு கொரோனா காரணமாக இருக்கலாம்.
மூன்று குழந்தைகளுக்கு தயான அவர் பொதுஇடங்களில் பங்கேற்றால், அது தொற்று நோயை ஏற்படுத்த கூடும் என்பதால், கிம் அவர்களை பத்திரமாக வைத்திருக்கலாம்.
ஏனெனில், கடந்த கிம் கூட, அந்தளவிற்கு அதிகமான பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. கிம்மின் மனைவியான Ri Sol-ju-வைப் பற்றி இன்று வரை பல விஷயங்கள் தெரியவில்லை. ஆனால் அவர் பட்டதாரி பெண் என்பது மட்டும் உறுதியாம்.
மேலும், அவர் உயர்குடும்பத்தை சேர்ந்தவர், 2009-ஆம் ஆண்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், 2012-ஆம் ஆண்டில் தான் மாநில ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக கிம்மின் மனைவியாக இவர் அடையாளம் காணப்பட்டார்.
இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இது ஒருபோதும் வட கொரியாவால் உறுதிப்படுத்தப்படவில்லை.
குடும்பம் குறித்த தகவல்கள் இரகசியமாக மறைக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் முதல் குழந்தை, ஒரு பையன் என்று கூறப்படுகிறது, இவர் 2010-ஆம் ஆண்டு பிறந்துள்ளான் எனவும், 2013-ஆம் ஆண்டு கிம் ஒரு மகளை பெற்றெடுத்திருப்பதாகவும் முன்னாள் NBA Dennis Rodman கூறினார்.
அதன் பின், தென்கொரியா உளவுத்துறை கண்காணிப்பின் படி அவருக்கு 2017-ஆம் ஆண்டு மற்றொரு குழந்தை பிறந்திருப்பதாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.


