Whatsapp-ஐ திறப்பதற்குள் மெசேஜ் Delete பண்ணிட்டாங்களா? அடுத்தவர் Delete செஞ்ச தகவலை படிப்பது எப்படி?
வாட்ஸ்அப் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப்பில் இருக்கும் ஒரு முக்கிய அம்சமே டெலிட் ஆல் அம்சம். வாட்ஸ்அப் செயலியில் மற்றவர் உங்களுக்கு அனுப்பிய மெசேஜ் சில நேரங்களில் நீங்கள் படிப்பதற்குள் மெசேஜ் டெலிடட் என காண்பிக்கும்.
சில சமயங்களில் இந்த அம்சத்தை நீங்களும் பயன்படுத்தியிருக்கலாம். வாட்ஸ்அப் செயலியில் மற்றவர் உங்களுக்கு அனுப்பிய மெசேஜ் சில நேரங்களில் நீங்கள் படிப்பதற்குள் மெசேஜ் டெலிடட் என காண்பிக்கும்.
சில சமயங்களில் இந்த அம்சத்தை நீங்களும் பயன்படுத்தியிருக்கலாம். வாட்ஸ்அப் மெசேஜை சிலருக்கு தவறாக அனுப்பியிருந்தால் அதை அவர்கள் படிப்பதற்குள்ளும் அல்லது படித்தப்பிறகும் குறிப்பிட்ட நேரத்துக்குள் டெலிட் என்ற தேர்வை கிளிக் செய்து டெலிட் ஆல் அம்சத்தை தேர்வு செய்து மொத்தமாக அழித்து விடலாம்.
நீங்கள் அனுப்பிய தகவல் பயனர்களுக்கு மெசேஜ் டெலிடட் என்று மட்டுமே காண்பிக்கும். மெசேஜ் மொத்தமாக அழிந்துவிடும். அப்படி பிறர் உங்களுக்கு அனுப்பும் மெசேஜை அவர்கள் டெலிட் ஆல் கொடுத்தாலும் பார்ப்பது எப்படி என்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.
வாட்ஸ் அப் டெலிடட் மெசேஜை படிப்பதற்கு கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று WhatsappRemoved+ என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின் அதில் காட்டும் முதல் பக்கத்தில் வாட்ஸ்அப் என்ற அம்சத்தை தேர்வு செய்யவும். அதன்பின் Savefiles என்ற அம்சத்தை கிளிக் செய்யவேண்டும். அவ்வளவுதான் இனி வாட்ஸ்அப் டெலிடட் மெசேஜ்களை நீங்கள் படிக்கலாம்.
உங்களுக்கு அனுப்பிய மெசேஜ் டெலிட் ஆல் கொடுத்தாலும் அது இந்த செயலியில் வரும். இந்த செயலியானது ஆண்ட்ராய்டு பயணர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.