WhatsApp, FB Messanger, iMessageல் நீங்கள் படித்தது மற்றவர்களுக்கு தெரியக்கூடாதா? அதற்கு என்ன செய்யவேண்டும்?
வாட்ஸ்அப், பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் ஆப்பிளின் ஐமேசேஜ் ஆகியவற்றில் பிறர் அனுப்பும் செய்திகளை நாம் படிக்கிறோமா இல்லையா என்பது மற்றவருக்கு தெரியவேண்டாம் என்றால், அதற்கு என்ன செய்வது என்பது குறித்து இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப், பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் ஆப்பிளின் ஐமேசேஜ் ஆகிய 3 தகவல் தொடர்பு செயலிகளும் Read Receipts என்ற அம்சத்தைக் கொண்டுள்ளன.
இதனை பயன்படுத்துவது மூலம் செய்தி அனுப்பும் ஒருவர், தனது செய்தியை பெற்ற பயனர்கள் அதனை பார்த்தார்களா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ள இது அனுமதிக்கிறது.
ஆனால் ஒருவர் தங்கள் விஷயங்களை இன்னும் தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்பினால், அதாவது ஒருவர் தனிப்பட்ட முறையில் அனுப்பும் செய்திகளை நாம் படிக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை என நினைத்தால், இந்த Read Receipt அம்சத்தை எந்த நேரத்திலும் முடக்கும் வசதி உள்ளது.
இந்த மூன்று செயலிகளிலும் இந்த அம்சம் தானாகவே பயன்பாட்டில் இருக்கும். நமக்கு அது தேவை இல்லை என்றால், இந்த அம்சத்தை ஆஃப் செய்துவிட்டால் போதும். இது ஓவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்.
இந்நிலையில் வாட்ஸ்அப் , பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் ஆப்பிளின் ஐமேசேஜ் போன்ற செயலில்களில் Read Receipts-ஐ எவ்வாறு அணைப்பது என்பது குறித்த வழிமுறைகளை இங்கு அறிந்துகொள்ளலாம்.
உங்கள் வாட்ஸ்அப்பில் Read Receipts-ஐ அணைக்க, கீழ்வரும் எளிமையான வழிமுறைகளை பின்பற்றவும்:
1. வாட்ஸ்அப் செயலியை திறக்கவும். திரையின் மேல் வலது மூலையில் உள்ள 3 புள்ளிகள் ஐகானைக் கிளிக் செய்து, Settings என்பதைக் கிளிக் செய்க.
2. Settings-க்கு வந்ததும், Account-ஐ க்ளிக் செய்து அதில் Privacy-ஐ கிளிக் செய்க.
3. Read Receips என்று அழைக்கப்படும் ஒரு விருப்பத்தை இங்கே காணலாம். அதனை Off செய்துகொள்ளலாம்.
குறிப்பு: இதனை அணைப்பதன் மூலம் தனிப்பட்ட சேட்டிங்கில் அதை முடக்க முடக்கமுடியும். குழு அரட்டைகளுக்கான (Group Chats) வாசிப்பு ரசீதுகளை முடக்க முடியாது.
[K9XLFU]
அப்பிளின் IMessage-ல் Read Receips-ஐ ஆஃப் செய்வதற்கு கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:
1. முதலில் உங்கள் iOS சாதனத்தில் iMessage செயலியை திறக்கவும்.
2. அதில் Settings-க்கு சென்று, Messages-ஐ க்ளிக் செய்க.
3. அங்கு Send Read Receipts என்று இருக்கும். மொத்தமாக அனைவருக்கும் முடக்க நினைத்தால் இதனை பயன்படுத்தலாம்.
4. குறிப்பிட்ட ஒருவரது செய்திகளை நாம் பார்ப்பதை அவர் அறிந்துகொள்ளாமல் இருக்க விரும்பினால், அந்த நபரின் chat-க்கு சென்று அவரது ப்ரொபைல் படத்தைக் கிளிக் செய்க.
5. அதில் Info-ஐ க்ளிக் செய்து, அங்கு இருக்கும் Send Read Receipt-ஐ ஆஃப் செய்யவேண்டும்.
பேஸ்புக் மெசஞ்சரில் Read Receipt-ஐ முடக்குவது எப்படி?
பேஸ்புக் மெசஞ்சரில், துரதிர்ஷ்டவசமாக Read Receipt-ஐ முடக்க நமக்கு ஆப்ஷன் கொடுக்கப்படவில்லை. settings-ல் Active On எனப்படும் ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே உள்ளது.
இதனை பயன்படுத்துவது மூலம், நீங்கள் ஓன்லைனில் இருப்பதாக மற்றவருக்கு காண்பிக்கும் Active Now-ஐ முடக்க உதவும். இது நீங்கள் ஓன்லைனில் இருப்பதை உங்கள் நண்பருக்கு தெரியாமல் வைத்திருக்க உதவும்.
இதை ஆன் அல்லது ஆஃப் செய்வதற்கு, Messenger செயலியில் உங்கள் ப்ரோஃபைல் ஐகானை க்ளிக் செய்தால், அங்கு Active 'On' அல்லது 'Off'' என உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.
அதனை ஆஃப் செய்த நேரத்தில், நாம் ஒருவரது செய்தியை பார்க்கிறோம் என்பதை அவர் தெரிந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ளலாம், நாம் Active 'On' என மாற்றும் வரை.