வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்: வீடியோ அழைப்பில் ஸ்கிரீன் ஷேர் வசதி அறிமுகம்
மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் ஸ்கிரீன் ஷேர் என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்
சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப்பில் ஸ்கிரீன் ஷேர் என்னும் புதிய அப்டேட்டை அதன் தாய் நிறுவனமான மெட்டா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த ஸ்கிரீன் ஷேர் வசதி மூலம் வீடியோ கால் அழைப்பின் போது பயனர்கள் தங்களது மொபைல் போனின் ஸ்கிரீனை மற்றொரு நபருடன் பகிர்ந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கிரீன் ஷேர் வசதி பயனர்கள் ஆன் செய்து விட்டால் மறுமுனையில் வீடியோ காலில் இருக்கும் நபரால் உங்களது போனில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர்களது திரையில் பார்க்க முடியும்.
இவை வீடியோ அழைப்பின் போது மொபைல் திரையின் கீழ் பகுதியில் தோன்றும் என்றும், இந்த வசதி வேண்டாம் என்றால் “டு நாட் டிஸ்டர்ப்” மோடை பயனர்கள் ஆன் செய்து கொள்ளலாம் என வாட்ஸ் அப் செயல்பாடுகளை உற்றுநோக்கி வரும் wabetainfo தெரிவித்துள்ளது.
WABetaInfo
விரைவில் பயன்பாட்டுக்கு வரும் புதிய அப்டேட்
இந்த ஸ்கிரீன் ஷேர் வசதியான இன்னும் சோதனை முயற்சியில் இருந்து வருகிறது.
விரைவில் இந்த புதிய அம்சமானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளங்களிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |