Whatsapp ஸ்டேட்டஸில் இப்படி கூட செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
வாட்ஸ் அப்பில் பல்வேறு வசதிகள் உள்ளது, தங்கள் பயனாளர்களுக்கு அடிக்கடி புதிய அப்டேட்களையும் வாட்ஸ் அப் வழங்கி வருகிறது.
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் லொகேஷன் ஸ்டிக்கரை வைப்பது எப்படி?
முதலில் ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் ஸ்மார்ட்போனில் வாட்ஸ் அப்பை திறந்து கொள்ள வேண்டும். பின்னர் வலது பக்கம் ஸ்வைப் செய்து ஸ்டேட்டஸ் பகுதிக்கு செல்ல வேண்டும், ஐபோன் பயனாளர்கள் கேமரா ஐகானை தட்டி, வலது பக்கம் ஸ்வைப் செய்வதன் மூலம் இந்த பகுதிக்கு செல்லலாம்.
அடுத்ததாக நீங்கள் ஸ்டேட்டஸில் பகிர விரும்பும் புகைப்படம் அல்லது வீடியோவை கேலரியில் தேர்ந்தெடுக்கலாம் அல்லது கேமரா ஆப்ஷனை பயன்படுத்தி நீங்களாகவே எடுத்துக்கொள்ளலாம்.
இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோவை எடிட் செய்ய, அதன் மேலே எமோஜி ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
அதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் கடிகாரத்திற்கு அடுத்ததாக லொகேஷன் என்கிற ஸ்டிக்கர் தென்படும், அதனை தேர்ந்தெடுத்து உங்களது தற்போதைய லொகேஷனை நீங்கள் தேர்ந்தெடுத்து அதனை ஸ்டேட்டஸோடு இணைத்து கொள்ளலாம்.