WhatsAppல் Storage Full பிரச்சனையை எளிதாக சரி செய்வது எப்படி?
வாட்ஸ் அப்பில் பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது ”ஸ்டோரேஜ் ஃபுல்” (Storage Full) தான்.
வாட்ஸ் அப் செயலியை தினந்தோறும் தனிப்பட்ட மற்றும் பணி சார்ந்து நிறைய பேர் பயன்படுத்துவதால் அடிக்கடி ஸ்டோரேஜ் ஃபுல்லாக நேரிடும்.
இந்த ஸ்டோரேஜ் பிரச்சினையை எப்படி சமாளிப்பது எப்படி?
அதற்கு முதலில் நீங்கள் வாட்ஸ் அப்பில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் ஒடியோக்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு அதில் திரும்பத் திரும்ப இருக்கும் புகைப்படங்கள் மற்றும் ஒடியோக்களை சரி பார்த்து டேட்டாவை நீக்க வேண்டும்.
அதன் பிறகு செல்போன் கேலரியில் இருக்கும் தேவையில்லாத வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் சரிபார்த்து டெலிட் செய்ய வேண்டும்.
அதோடு உங்களுக்கு வாட்ஸ் அப்பில் வரும் ஒடியோ மற்றும் வீடியோக்கள் போன்றவைகள் தானாக பதிவிறக்கம் ஆவதை நீங்கள் தடுக்க வேண்டும்.