வாட்ஸ்அப் மூலம் பிற செயலியில் பேச முடியுமா? விரைவில் வரப்போகும் புதிய வசதி
வாட்ஸ்அப் செயலில் இருந்து வேறு சாட்டிங் செயலிகளில் பேசக் கூடிய வசதி விரைவில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள், வேறு குறுந்தகவல் செயலிகளை பயன்படுத்துபவர்களிடம் Chat செய்ய அனுமதிக்கும் புதிய அம்சம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது.
புதிய வாட்ஸ்அப் (Whatsapp) IOS பீட்டா வெர்ஷனில் இதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐரோப்பிய யூனியனின் Digital Markets விதியை ஏற்கும் வகையில் இந்த வசதி வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.
இந்த அம்சமானது, Third Party Apps வாட்ஸ்அப்-யில் ஒருங்கிணைந்து வேலை செய்ய அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, வாட்ஸ்அப் ஆண்ட்ராய்ட் பீட்டா Version-யில் இதே அம்சம் வழங்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் புதிய அம்சம் தொடர்பிலான Screenshots வெளியாகியிருக்கிறது. அதில் ''Third-Party Chats'' பெயரில் தனி Folder இடம்பெற்று இருக்கிறது. இந்த Folder-யில் மற்ற செயலிகளின் Chat-களை பார்க்க முடியும் என தெரிகிறது.
வாட்ஸ்அப்-யில் மற்ற Contact-களுக்கு Chat செய்ததைப் போலவே, இதர செயலிகளை பயன்படுத்துவோரிடமும் Chat செய்ய முடியும்.
இதில் எந்தெந்த செயலிகள் இயங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ள நிலையில், வாட்ஸ்அப் இதனை ஆண்ட்ராய்ட் மற்றும் IOS வெர்ஷன்களில் வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவது மட்டும் தற்போதைக்கு உறுதியாகியுள்ளது.
Joe Maring/Digital Trends
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |