WhatsApp Update: இப்போது Selfie Sticker-களை உருவாக்க முடியும்
WhatsApp-இல் இப்போது செல்ஃபி ஸ்டிக்கர்களை (Selfie Sticker) உருவாக்கும் புதிய அம்சம் வெளியாகியுள்ளது.
நீங்கள் உங்கள் sticker pack-கை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
இதன் மூலம், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர புதிய Filter விருப்பமும் கிடைக்கிறது.
வாட்ஸ்அப்பில் மெட்டா ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது, இதன் மூலம் இந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
"வாட்ஸ்அப்பை மிகவும் வேடிக்கையாகவும் பயன்படுத்த எளிதாகவும் மாற்ற நாங்கள் எப்போதும் பணியாற்றி வருகிறோம், எனவே உங்கள் அனுபவத்தை மேம்படுத்த புதிய அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு புதுப்பிப்புகளுடன் புதிய ஆண்டைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
இந்த புகைப்படத்தை வாட்ஸ்அப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Camera Effects: வாட்ஸ்அப்பில் ஒருவருடன் புகைப்படம் அல்லது வீடியோவைப் பகிரும்போது, 30 க்கும் மேற்பட்ட filters, backgrounds மற்றும் visual effects-ஐ பயன்படுத்த முடியும்.
Selfie Stickers: வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் செல்ஃபிக்களை ஸ்டிக்கர்களாக மாற்றி தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
ஸ்டிக்கரை உருவாக்க பொத்தானைத் தட்டினால், செல்ஃபி எடுப்பதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்கும், இது ஒரு தனித்துவமான ஸ்டிக்கராக மாற்றப்படலாம். இந்த அம்சம் தற்போது Android சாதனங்களின் பயனர்களுக்கு கிடைக்கிறது, விரைவில் iOS பயனர்களுக்கும் புதுப்பிக்கப்படும்.
Share Sticker Pack: உங்கள் நண்பர்களில் யாருக்காவது ஒரு ஸ்டிக்கர் பேக் பிடித்திருந்தால், அதை நேரடியாக chat-ல் பகிரலாம்.
Quick Reactions: சாட்டிங் வேகமாகவும் வசதியாகவும் இருக்க double tap reactions அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு செய்தியை இருமுறை தட்டுவதன் மூலம் பயனர்கள் ஈமோஜி வழியாக ரியாக்ஷன் கொடுக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |