மீடியா தலைப்புகளைத் திருத்தலாம்; WhatsAppல் புதிய அம்சம்
புகைப்படங்கள், வீடியோக்கள், GIFகள் மற்றும் ஆவணங்களைப் பகிரும்போது தலைப்புகளைத் திருத்தக்கூடிய புதிய அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மெசேஜ் எடிட்டிங் வசதியை கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த வசதி ஒரு செய்தியை அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்ய வாட்ஸ்அப் உதவுகிறது.
ஆனால் படங்கள், வீடியோக்கள் மற்றும் gif களுடன் அனுப்பப்பட்ட தலைப்புகளால் இது சாத்தியமில்லை என்பதால் புதிய அப்டேட் மூலம் இந்தச் சிக்கலைச் சரிசெய்துள்ளது வாட்ஸ்அப்.
இப்போது எடிட்டிங் ஆப்ஷன் வீடியோ செய்திகள் மற்றும் குறுஞ்செய்திகளில் வேலை செய்யும். மீடியா செய்தியைக் கிளிக் செய்து, எடிட் விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், எடிட்டிங் ஆப்ஷன் வீடியோ மெசேஜ் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ் இரண்டிற்கும் வேலை செய்கிறது. இதையும் 15 நிமிடங்களில் திருத்தலாம்.
வாட்ஸ்அப் சமீபத்தில் எச்டி புகைப்படங்களை அனுப்ப புதிய விருப்பத்தை அறிமுகப்படுத்தியது. முன்னதாக, வாட்ஸ்அப் மூலம் படங்களைப் பகிரும்போது, கம்ப்ரெஸ் எனப்படும் சுருக்கத்தால் அசல் படத்தின் தரம் இழக்கப்படும். ஆனால் புதிய அப்டேட் மூலம் தரத்தை இழக்காமல் படங்களை பகிர முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
WhatsApp users can edit photo captions, WhatsApp new feature update, WhatsApp Updates, WhatsApp News, Tech news in Tamil, WhatsApp Caption edit