உங்களுக்கு எண்ணெய் சருமமா? இதனை போக்க கோதுமை மாவை இப்படி பயன்படுத்தி பாருங்க... நாளடைவில் நம்ப முடியதா மாற்றம் நிகழும்!
பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். ஆனால், அவற்றில் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது.
ஏனென்றால், இந்த சருமத்திற்கு மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது அதிகப்படியான பருக்கள் ஏற்படுவது மற்றும் சரும வறட்சி ஏற்படுவதும் தான்.
எனவே, எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
அந்தவகையில் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அதனை போக்க ஒரு சூப்பரான டிப்ஸ் ஒன்றை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு - 4 டீஸ்பூன்
- தேன் - 2 டீஸ்பூன்
- ஆடை நீக்கிய பால் - 3 டீஸ்பூன்
- ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன்
செய்முறை
அகன்ற பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சி, ஆற வைத்துக்கொள்ளவும். பின்பு ஆறிய பாலில் ரோஸ் வாட்டர், தேன் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் கோதுமை மாவை சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ளவும்.
அதனை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இந்த பேஸ் பேக் நன்கு உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பொலிவடையும்.