தித்திக்கும் சுவையில் கோதுமை பாயசம்: இலகுவாக எப்படி செய்வது?
பண்டிகை காலங்களில் வீட்டில் உடனே நாம் செய்க்கூடிய ஒரு இனிப்பு வகை தான் இந்த பாயசம்.
பாயசம் சாப்பிடுவது வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் கோதுமை பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உடைந்த கோதுமை- ¼ கப்
- தண்ணீர்- 2 கப்
- வெல்லம்- ¾ கப்
- தேங்காய்- 1 கப்
- நெய்- 1½ ஸ்பூன்
- முந்திரி- 15
- ஏலக்காய்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் உடைந்த கோதுமை சேர்த்து 2 முறை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் கழுவிய கோதுமை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதித்து கெட்டியாகி வரும்வரை வேகவைக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து தேங்காய்ப்பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதனையடுத்து கோதுமை நன்கு வெந்து கெட்டியாகி வந்ததும் இதில் வெல்ல பாகு மற்றும் வடிகட்டிய தேங்காய்ப்பால் சேர்த்து கெட்டியாகி வரும்வரை கொதிக்கவிடவும்.
பின் இதில் ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்து முந்திரி சேர்த்து கிளறினால் சுவையான கோதுமை பாயசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |