தித்திக்கும் சுவையில் கோதுமை புட்டு.., இலகுவாக செய்வது எப்படி?
கோதுமையில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவாகும்.
இது செரிமானம், இதய ஆரோக்கியம், எடை மேலாண்மை, நீரிழிவு கட்டுப்பாடு மற்றும் நீண்ட கால ஆற்றலை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்தவகையில், சத்தான கோதுமை வைத்து புட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு- 1 கப்
- உப்பு- சிறிதளவு
- தேங்காய் துருவல்- ¼ கப்
- நாட்டு சர்க்கரை- 5 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்
- நெய்- 1 ஸ்பூன்
- முந்திரி- 10
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கோதுமை மாவு சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதில் உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.

பின் அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து அதில் பிணைந்த கோதுமை மாவு, தேங்காய் துருவல் சேர்த்து 20 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக இதில் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்தால் சுவையான கோதுமை புட்டு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |