2023 தைப்பூசம் எப்போது ? விரதம் இருக்கும் முறை எப்படி?
தமிழர்கள் பாரம்பரியமாக பல விழாக்களை கொண்டாடுவது மரபாகும் அவற்றுள் தைப்பூசமும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தைப்பூச திருநாளில் உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
இது முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். முருகனுக்கு உகந்த தினம் தைப்பூச தினம் எனக் கூறுவர்.
இந்தவருடம் தைப்பூச திருநாள் எந்தநாளில் வருகின்றது? விரதம் எப்படி இருக்கலாம் என்பதை பார்ப்போம்.
எப்போது?
தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணையும் நாளை தைப்பூசம் என்கிறோம்.
2023 ம் ஆண்டு பிப்ரவரி 05ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 04 ம் தேதி இரவு 10.41 மணி துவங்கி பிப்ரவரி 06 ம் திகதி அதிகாலை 12.48 வரை பெளர்ணமி திதி உள்ளது.
இதே போல் பிப்ரவரி 04 ம் திகதி காலை 10.41 துவங்கி பிப்ரவரி 05 ம் திகதி பகல் 01.14 வரை பூசம் நட்சத்திரம் உள்ளது.
பிப்ரவரி 05 ம் திகதியே நாள் முழுவதும் பெளர்ணமி உள்ளதால் அந்த நாளே தைப்பூச நாளாக கருதப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை
- அதிகாலையில் எழுந்து, நீராடி, நெற்றியில் திருநீறு அணிந்து, முருகன் படத்திற்கு முன் விளக்கேற்ற வேண்டும்.
- காலை, பகல் இரு வேளையும் பால், பழம் மட்டுமே அருந்த வேண்டும்.
- இருவேளையும் கோவிலுக்கு செல்வது சிறப்பானது.
- முடியாதவர்கள் மாலையில் மட்டுமாவது கோவிலுக்கு சென்று முருகனை வழிபட வேண்டும்.
- தைப்பூசத்தன்று முருகன், சிவன், குரு பகவான் ஆகியோரை வழிபடலாம்.
- முருகனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், பால் பாயசம் இவற்றில் ஏதாவது ஒன்றை படைத்து வழிபடலாம்.
- தைப்பூசத்தன்று வேல் வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை தரும்.
விரதமிருப்பதன் பலன் என்ன?
தைப்பூசத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், செல்வம் பெருகும், கணவன்- மனைவி ஒற்றுமை சிறக்கும், தொட்ட காரியம் அனைத்தும் பூரணமாக நிறைவேறும்.