பள்ளி குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி? அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ நிபுணர் அறிவிப்பு
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2022 ஆரம்பத்திலிருந்து குழந்தைகளுக்கு Covid-19 தடுப்பூசி வழங்கப்படும் என அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் Anthony Fauci கூறியுள்ளார்.
பள்ளி வயது குழந்தைகளுக்கு பெருமளவில் தடுப்பூசி போடுவதால், மில்லியன் கணக்கான குழந்தைகள் விரைவில் பள்ளிகளுக்கு செல்லமுடியும் என்றும் இப்போது வீட்டில் தங்கள் பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் மில்லியன் கணக்கான பெற்றோர்கள் மீதான சுமையும் குறையும் என Fauci கூறியுள்ளார்.
இந்நிலையில், Older Children எனப்படும் 11 முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு வருவதாகவும், அவர்களைத் தொடர்ந்து 3 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க பரிசீலித்துவருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை ஜான்சன் அண்ட் ஜான்சநின் கொரோனா தடுப்பூசியை நாட்டின் மூன்றாவது அவசரகால தடுப்பூசியாக FDA அங்கீகரித்துள்ள நிலையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்போதைக்கு, அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று தடுப்பூசிகளில் எதுவும் (ஃபைசர் மற்றும் மாடர்னா உட்பட) 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், இந்த அனைத்து மருந்துகளைகே கொண்டு குழந்தைகள் மீதான சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்துவரும் நிலையில், சில தனியார் மற்றும் மத பள்ளிகள் பொதுப் பள்ளிகள் மற்றும் சில பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளன.