59 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகில் வரும் வியாழன் கோள்: அரிய நிகழ்வை எப்படி பார்ப்பது?
செப்டம்பர் 26ம் திகதி பூமிக்கு அருகில் வரும் வியாழன் கோள்.
600 மில்லியன் தொலைவில் இருந்து 367 மில்லியன் தொலைவிற்கு நகர்வு.
59 ஆண்டுகளுக்கு பிறகு வியாழன் கிரகம் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வர இருப்பதால் விண்வெளி ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் அதை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய வாயு ராட்சத கோளான வியாழன், பூமியை போன்று 1300 மடங்குகளை உள்ளடக்க கூடிய பெரிய கோளாக காணப்படுகிறது.
இத்தகைய வாயு கோளான வியாழன் பூமியில் இருந்து 600 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது.
இந்த மிகப்பெரிய கோளான வியாழன் தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு தன் இருப்பிடத்தில் இருந்து நகர்ந்து அதன் எதிர் திசையை அடைய இருப்பதால் செப்டம்பர் 26ம் திகதி பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது.
பொதுவாக பூமியில் இருந்து 600 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கும் வியாழன் கோள் செப்டம்பர் 26 திகதி அதன் எதிர் திசையை அடைந்து 367 மில்லியன் மைல்களுக்கு அருகில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்திசை அடைவது என்பது, சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவது போன்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய நிகழ்வு கடைசியாக 1963ம் ஆண்டு நடைபெற்ற நிலையில் சுமார் 59 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெறவுள்ளது.
நாசாவின் கூற்றுப்படி செப்டம்பர் 26ம் திகதி இரவு முழுவதும் ராட்சத எரிவாயு வியாழன் கோளை சிறப்பாக பார்க்க முடியும் என தெரிவித்துள்ளது.
வியாழன் கோளை எவ்வாறு பார்ப்பது?
நாசாவின் ஆராய்ச்சி வானியற்பியல் நிபுணர் ஆடம் கோப்லெஸ்கி (Adam Kobleski) தெரிவித்துள்ள அறிவுரையில், வியாழன் கோளின் சிறப்பாக பார்ப்பதற்கு தொலைநோக்கியின் அமைவிடம் இருட்டாகவும், உயரமானதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள பரிந்துரைத்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு; ரஷ்ய ஜனாதிபதி புடினை அவரது சொந்த தளபதிகளே கொலை செய்வார்கள்: காரணம் என்ன தெரியுமா?
மேலும் மத்திய பட்டை (central band)கொண்ட நல்ல தொலைநோக்கி மற்றும் மூன்று முதல் நான்கு கலிலியன் செயற்கைக்கோள் தொலைநோக்கிகளில் தெரியும் என தெரிவித்துள்ளார்.