முகேஷ் அம்பானி தினமும் ரூ.3 கோடியை இழந்தால்; முழு சொத்தும்....
உலக பணக்காரர்களில் 11வது இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் 11வது பணக்காரர் ஆவார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு 1,02,11,37,73,00,000 (ரூ 10.21 லட்சம் கோடி)
இதில் முகேஷ் அம்பானி தினமும் 3 கோடி ரூபாய் செலவழித்தால் அவருடைய சொத்து குறுகிய காலத்தில் அழிந்து விடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முகேஷ் அம்பானி
ஆசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரராக அறியப்படும் முகேஷ் அம்பானி, தமது தந்தை தொடங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து தற்போது ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்பு இண்டஸ்ட்ரீஸ் என தமது தொழிலை மேம்படுத்திக் கொண்டு செல்கிறார்.
திருபாய் அம்பானி தொடங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள், அவரது மறைவுக்கு பின்னர் முகேஷ் மற்றும் அனில் அம்பானி சகோதரர்களுக்கு பங்களிக்கப்பட்டது.
இவர் மட்டும் இவருடைய குடும்பத்தார்கள் பற்றிய பல விடயங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளிவந்துக்கொண்டிருக்கும். தற்போது ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் கோடியில் செலவழித்து வருகின்றனர்.
இந்நிலையில் முகேஷ் அம்பானி தினமும் 3 கோடி ரூபாய் செலவழித்தால் அவருடைய சொத்து முழுவதும் எப்போது குறையும் என்ற கேள்வி எழும்புள்ளது.
முழு சொத்தும் எப்போது குறையும்?
அவர்கள் தங்கள் நிகர மதிப்பில் இருந்து தினமும் 3 கோடி ரூபாய் செலவழித்தால் அவர்களின் அனைத்து செல்வங்களும் 340379 நாட்களில் முடிந்துவிடும்.
இதை வருடங்களாக கூற நினைத்தால், ஒரு வருடத்தில் 365 நாட்கள் உள்ளன. இப்போது 340379 நாட்களை வருடங்களாக மாற்றினால், அவர் தனது செல்வத்தை முடிக்க 932 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் ஆகும்.
செல்வம் பல நூற்றாண்டுகளில் முடிவடையும், அதாவது முகேஷ் அம்பானி தனது நிகர மதிப்பில் இருந்து தினமும் 3 கோடி ரூபாய் செலவழித்தால் , அனைத்து செல்வமும் முடிவதற்கு 932 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் ஆகும்.
மேலும் 2024 ஆம் ஆண்டை பொறுத்தளவில் அம்பானியின் நிகர மதிப்பு சுமார் ரூ.1.98 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |