உங்கள் மரணத்தை துல்லியமாக கணிக்கும் Ai!
The Death Clock என்ற செயற்கை நுண்ணறிவால் இயங்கும் செயலியானது பயனர்களின் வாழ்க்கை முறையின் அடிப்படையில் அவர்களின் ஆயுட்காலத்தை கணிக்கும் திறனுக்காக பிரபலமடைந்து வருகிறது.
ஜூலை மாதம் தொடங்கப்பட்டதில் இருந்து 125,000 இற்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களுடன், இந்த பயன்பாடு சுகாதார ஆர்வலர்களின் கவனத்தை மட்டுமல்ல, பொருளாதார நிபுணர்கள் மற்றும் நிதி திட்டமிடுபவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உணவு, உடற்பயிற்சி, மன அழுத்த நிலைகள் மற்றும் தூக்க முறைகள் போன்ற காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, பயனரின் இறப்புத் திகதியை இது கணக்கிட்டு கூறுகிறது.
தற்போது அமெரிக்காவில் வாழும் 85 வயது முதியவர் ஒருவர் அடுத்த ஒரு வருடத்திற்குள் இறப்பதற்கான சாத்தியம் 10% எனும் சராசரியாக இன்னும் 5.6 ஆண்டுகள் அவர் வாழ்வார் என்றும் அந்த செயலி கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |