தானாகவே நகரும் கற்கள்.., உலகில் எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?
யாரும் இல்லாத இடத்தில் தானாக நகர்ந்து செல்லும் கற்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
நகரும் கற்கள்
பொதுவாகவே கற்கள் ஒரே இடத்தில் தான் இருக்கும், நகராது. ஆனால், நீங்கள் இன்று ஒரு இடத்தில் பார்க்கின்ற கற்கள், நாளைக்கு பார்க்கும் போது அந்த இடத்தில் இல்லையென்றால் உங்களின் மனநிலை எப்படி இருக்கும். யாராவது எடுத்து சென்று இருப்பார்கள் என்று தான் தோன்றும்.
ஆனால், இந்த இடத்தில் உள்ள கற்கள் மனிதர்கள் யாரும் இல்லாத நேரத்தில் நகர்ந்து செல்கிறது.
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ரேஸ்டிராக் பாளையா என்ற பகுதியில் உள்ள டெத் வேலி என்ற இடத்தில் உள்ள கற்கள் தானாகவே நகர்வதாக கூறப்படுகிறது. மேலும், நிவேடா என்ற இடத்தில் உள்ள கற்கள் கூட நகர்வதாக சொல்கின்றனர்.
1900 -களில் பாறைகள் நகர்வதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு எந்தவொரு ஆதாரங்களும் இல்லை.
இதையடுத்து, 1915 -ம் ஆண்டில் ஜோன்ஸ் என்பவர் மக்கள் மத்தியில் பேசப்பட்ட கருத்துக்களை வைத்து, குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்குள்ள கற்களை பார்வையிட்டு செல்கிறார். ஆனால், மறுநாள் வந்து பார்க்கையில் அந்த கற்கள் வேறு இடத்தில் இருக்கின்றன.
அப்போது, சில கற்கள் நகர்ந்து சென்றதற்கான தடங்கலும், சில கற்கள் தடங்களே இல்லாமல் நகர்ந்தும் சென்றுள்ளன. பின்னர், அந்த இடம் குறித்து முதல் முறையாக ஆவணப்படுத்தினார்.
பின்னர், இந்த செய்தி விஞ்ஞானிகள் கவனத்திற்கு சென்றது. அவர்களின் ஆராய்ச்சியும் தோல்வியில் தான் முடிந்தது.
அவர்கள் இதுவரை கண்டுபிடித்தது என்னவென்றால், நகரும் கற்களின் கீழ்ப் பகுதியில் கூர்மையாக இருந்தால் கற்கள் நகரும் போது தடம் ஏற்படுகிறது. பின்னர், கூர்மையான பகுதி மழுங்கிவிட்டால் தடம் ஏற்படுவதில்லை என்பது தான்.
மேலும், இந்த கற்கள் பயணம் செய்யும்போது தங்களது பாதையை மாற்றியுள்ளன. இது தொடர்பாக 1948 -ம் ஆண்டில் இரண்டு ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் அவர்கள் அப்பகுதியில் பெரும் காற்று வீசுவதால் கற்கள் நகருகிறது என்று கூறினர்.
ஆனால், அந்த கூற்றை பலரும் ஏற்கவில்லை. ஏனென்றால், 300 கிலோ வரை எடை உள்ள கற்களும் நகருகின்றன.
இன்னும் சிலர், இந்த கற்களுக்குக் கீழே சிறிய பிசுபிசுப்பான களிமண் இருப்பதால் நகருவதாக கூறினர். ஆனால், ஆய்வில் முடிவில் இது தான் காரணம் என்று உறுதிப்படுத்த முடியவில்லை.
இன்னும் ஒரு சிலர் கற்கள் இருக்கும் பகுதிக்குக் கீழே பல நூறு அடிகளுக்குக் கீழ் ஒரு பெரும் நதி ஓடுகிறது. இந்த நதியின் ஓட்டத்தால் கற்களும் நகருகின்றன என்றனர்.
ஆனால், இன்றுவரை கற்கள் நகருவது தொடர்பாக அறிவியல் பூர்வமான காரணங்கள் ஏதும் தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |