காலை 6 மணிக்கு எழுந்து 35 கிலோ உணவு சாப்பிடும்.., உலகின் மிக உயரமான நீர் எருமை எங்குள்ளது?
உலகிலேயே மிக உயரமான உயிருள்ள நீர் எருமை கின்னஸ் உலக சாதனையைப் (GWR) பெற்று வரலாறு படைத்துள்ளது.
எங்குள்ளது?
தாய்லாந்தைச் சேர்ந்த நீர் எருமையான கிங் காங், மிக உயரமான உயிருள்ள நீர் எருமையாக கின்னஸ் உலக சாதனையைப் (GWR) பெற்று வரலாறு படைத்துள்ளது.
6 அடி 0.8 அங்குல உயரத்தில் நிற்கும் கிங் காங், சராசரி நீர் எருமையை விட 20 அங்குல உயரம் கொண்டது. இந்த தாய்லாந்தின் நக்கோன் ராட்சசிமாவில் உள்ள நின்லனீ பண்ணையில் வாழ்கிறது.
ஏப்ரல் 1, 2021 அன்று கிங் காங் நீர் எருமை பிறந்தது. இது, மற்ற கன்றுகளிலிருந்து எப்போதும் வித்தியாசமாக இருந்தது.
இதனால் இந்த எருமை பிறந்த போதிலிருந்தே, வழக்கமான நீர் எருமையை விட மிக உயரமாக வளரப் போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது.
பின்னர் இந்த எருமையின் உயரம் அதனை பண்ணையில் தனித்துவமாக மாறியது மட்டுமல்லாமல், கின்னஸ் உலக சாதனைகளிலும் இடம் பெற்றுள்ளது.
இந்த எருமை மிகப்பெரிய அளவாக இருந்தபோதிலும், கிங் காங் அமைதியாக உள்ளது. இது ஒரு விளையாட்டுத்தனமான மற்றும் மென்மையான ஆளுமையைக் கொண்டுள்ளது. இந்த எருமைக்கு மக்களுடன் நேரம் செலவிடுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த உயரமான நீர் எருமை கிங் காங்கிற்கு நாள்தோறும் 35 கிலோ உணவு வழங்கப்படுகிறது. வைக்கோல் மற்றும் சோளம் சாப்பிடும் என்று கூறப்படுகிறது. பின்னர், மாலை 5.30 மணிக்கு இரவு உணவிற்கு முன் இரண்டாவது குளிக்க வைக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |