உலகிலேயே முதலில் 2025 புத்தாண்டை கொண்டாடிய மக்கள்.., எங்கு தெரியுமா?
2025 -ம் ஆண்டுபிறக்கவுள்ள நிலையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகியுள்ளனர்.
முதலில் எங்கு கொண்டாடினர்?
2024-ம் ஆண்டின் 365 நாட்கள் நிறைவடைந்து 2025 புத்தாண்டை வரவேற்க மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தீர்க்கரேகையின் அடிப்படையில், பூமியானது 24 நேர மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
எப்போ அந்த தீர்ப்பு வந்துச்சோ அப்பவே அவர் சாப்பிடாம ஆயிட்டாரு.., VJ சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி
இதனால் ஒவ்வொரு நாடும் ஒரு நிலையான நேரத்தைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுகின்றன.
இதனடிப்படையில், சில நாடுகள் முதலாவதாகவும், சில நாடுகள் தாமதமாகவும் புத்தாண்டை வரவேற்கின்றன. உலகளாவிய நேரத்தை விட 5 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்னதாக இந்தியா உள்ளது (UTC +5:30).
அந்தவகையில், பூமியில் புத்தாண்டைக் கொண்டாடும் முதல் இடம் கிரிட்டிமாட்டி தீவு ஆகும். இது கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீவில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணியளவில் 2025 ஆம் வருடம் பிறந்துள்ளது.
அதாவது, இந்தியாவை விட துல்லியமாக 8.5 மணி நேரம் முன்னால் இந்த தீவு உள்ளது. இங்கு, 2025 புத்தாண்டு பிறந்த நிலையில் அங்குள்ள மக்கள் பட்டாசுகள், இசை மற்றும் கொண்டாட்டங்களுடன் வரவேற்றனர்.
HAPPY NEW YEAR EARTH🎇🎇🎇
— ☘︎ (@wordsprom) December 31, 2024
Kiritimati Island, Kiribati was the First to see 2025 right now.
HAPPY NEW YEAR EVERYONE 🎇🎊🎊
Welcome to 2025.♡ pic.twitter.com/Nh8kUgw0ho
அதேபோல, கிரிபாட்டி, சமோவா, டோங்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, ரஷ்யாவின் சில பகுதிகள், மியான்மர், ஜப்பான் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 41 நாடுகள் இந்தியாவுக்கு முன்னதாக புத்தாண்டை வரவேற்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |