பூமியின் முதல் நிலம் எங்கு உருவானது தெரியுமா? விஞ்ஞானிகள் பகிர்ந்த தகவல்
பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீருக்கு அடியில் நிலம் உருவாகியிருக்கலாம் என்று கூறப்பட்டாலும் பூமியின் முதல் நிலம் உருவான இடம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
விஞ்ஞானிகள் தகவல்
2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீருக்கு அடியில் நிலம் உருவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் தோன்றியதாகவும் ஆராய்ச்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி முழுவதும் தண்ணீர் நிறைந்துள்ளது என்று அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனால், பூமியின் மேற்பரப்பு சற்று உயர்ந்ததால் தான் கண்டங்கள் தோன்றியுள்ளது என்று விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பூமியில் இருந்து முதலாவதாக நிலம் எங்கிருந்து உருவானது என்று பலருக்கும் கேள்வி இருக்கும். அதுவும், பூமியில் தோன்றிய முதல் நிலப்பகுதி இந்தியாவில் இருக்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
பூமியின் முதல் நிலப்பரப்பு எங்கு உருவானது என்பதை கண்டறிவதற்காக குழு ஒன்று ஆராய்ச்சியை தொடங்கியது.
அதற்காக, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கற்களை எடுத்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில் இரண்டு விடயங்கள் கண்டறியப்பட்டது.
அது என்னவென்றால், 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீருக்கு அடியில் பூமி உருவாகியிருக்கலாம். மேலும், 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் தோன்றியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது என்பதாகும்.
முக்கியமாக, இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிங்பூம் பாறைகள் (Singhbhum Rocks) தான் நீருக்கடியில் இருந்த உலகின் முதல் நிலம் ஆகும். இந்த பாறைகளானது முதன்முதலில் கடல் மணலும் ஆற்றங்கரை மணலும் உருவாகின்றன.
குறிப்பாக, இந்த பாறையில் இருக்கும் ஜிர்கான் (zircon) என்ற கனிமத்தின் அடிப்படையில் தான் இந்த பாறைகள் சுமார் 3 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |