உலகிலேயே மிகச்சிறிய நகரம் எங்குள்ளது? மொத்தமாகவே 52 பேர் தான்
வெறும் 52 குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ள உலகிலேயே மிகச்சிறிய நகரம் எங்குள்ளது என்பதை பற்றி பார்க்கலாம்.
மிகச்சிறிய நகரம்
உலகிலேயே மிகச்சிறிய நகரம் எதுவென்றால் மேற்கு குரோஷியாவின் இஸ்ட்ரியா பகுதியை அடிப்படையாகக் கொண்டுள்ள ஹம் (Hum) நகரம் தான். இங்கு, வெறும் 52 குடியிருப்பாளர்கள் தான் வசிக்கின்றனர்.
இது, உலகின் மிகச் சிறிய நகரமாக அதன் அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இடம் சுற்றுலாப் பயணிகளுக்கு சரியான மற்றும் அமைதியான இடமாக உள்ளது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஹம் நகரம் அதன் சிறிய மக்கள்தொகை, வளமான கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுக்கு பிரபலமானது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தில் 30 மக்கள் இருந்தனர். பின்னர், 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
இது உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஹம் நகரத்தில் ஒரு நுழைவாயில் மற்றும் குடியிருப்பாளர்களைக் கொண்ட 20 கட்டிடங்கள் உள்ளது.
குறுகிய தெருக்களைக் கொண்ட இந்த நகரம் வரலாற்று கட்டிடங்களால் நிறைந்துள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் ஜெரோம் தேவாலயம் என்று பெயரிடப்பட்ட அழகான ரோமானஸ் தேவாலயமும் இந்த நகரத்தில் உள்ளது.
மேலும், "உலகின் மிகச்சிறிய நகரம்" என்ற கின்னஸ் உலக சாதனையிலும் ஹம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நகரத்தின் பொருளாதாரமானது சுற்றுலா மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பச்சை மலைகள் மற்றும் திராட்சைத் தோட்டங்களால் சூழப்பட்ட இந்த நகரம் உயர்தர ஒயின்கள் மற்றும் உள்ளூர் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட "பிஸ்கா" எனப்படும் பாரம்பரிய மதுபானங்களை உற்பத்தி செய்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |