மக்கள் வாழவே முடியாத உறையவைக்கும் குளிர் நிறைந்த 10 நாடுகள்.., எது தெரியுமா?
ஒவ்வொரு நாடுகளிலும் ஒரு சிறப்பான அம்சங்கள் இருக்கும். அதில் உலகில் ஏராளமான நாடுகளில் குளிர்ச்சி அதிகம் காணப்படும்.
அந்தவகையில், மக்கள் வாழவே முடியாத உறையவைக்கும் குளிர் நிறைந்த 10 நாடுகள் குறித்து பார்க்கலாம்.
அண்டார்டிகா
அண்டார்டிகாவில் நிரந்தர குடியிருப்புகள் கிடையாது. இங்கு குறைந்தபட்ச வெப்பநிலை -93.2°C ஆகும்.
வெயில் காலத்தில், அங்கு மக்களின் எண்ணிக்கை சுமாராக 5000 மட்டுமே, குளிர்காலம் வந்தால் 1000 மக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
கிரீன்லாந்து
மிக குளிர்ந்த நாடான கிரீன்லாந்தில் வெப்பநிலை -69.4°C வரை இருக்கும்.
கிரீன்லாந்து மிகக் குளிரான நாடாக இருப்பதால், அங்குள்ள மக்கள் குளிருக்கு ஏற்றவாறு உடைகள் அணிந்து வாழ்கிறார்கள்.
ரஷ்யா
ரஷ்யாவின் ஒய்ம்யகான் போன்ற இடங்களில் சுமார் 500 பேர் மட்டுமே வாழ்கிறார்கள். இங்கு வெப்பநிலை -50°C இருக்கும்.
பனி நிறைந்த கடும் குளிரில் வாழ, மக்கள் உரிய பனிக்குளிர் உடைகள் அணிகிறார்கள். அதிக குளிரில் நாய்கள் மற்றும் மாடுகளுக்கும் மெல்லிய கம்பளிகள் கொடுக்கிறார்கள்.
கனடா
கனடாவின் யூகன் மற்றும் நார்த்வெஸ்ட் டெரிடோரிகள் போன்ற இடங்களில் சிறிய நகரங்கள், கிராமங்கள் உள்ளன.
இங்கு மொத்தமாக சுமார் 40,000 - 50,000 பேர் இந்த மிகக் கடுமையான குளிர் சூழ்நிலையில் வாழ்கிறார்கள். இங்கு வெப்பநிலை -62.7°C இருக்கும்.
மங்கோலியா
மங்கோலியாவின் குளிர் பகுதிகளில் சுமார் 30 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு வெப்பநிலை -40°C இருக்கும்.
உணவுக்கு அவர்கள் பெரும்பாலும் மாமிசம், மீன், மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுகிறார்கள், ஏனெனில் அது உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது.
நார்வே
நார்வேயின் வடபகுதியில் வாழும் சாமி இன மக்கள் சுமார் 40,000 பேர் உள்ளனர்.
இங்கு வெப்பநிலை -51°C (Karasjok), -40°C வரை (Svalbard) இருக்கும். கடும் பனிக்குளிரை சமாளிக்க, gakti எனப்படும் பாரம்பரிய உடைகள் அணிகிறார்கள்.
ஸ்வீடன்
ஸ்வீடனின் வடபகுதிகளில், குறிப்பாக கிரூனா, லூலியா போன்ற இடங்களில் சுமார் 2 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு வெப்பநிலை --52°C இருக்கும்.
இந்த கடும் பனிக்குளிர் சூழ்நிலையில், மக்கள் வெப்பம் தக்க வைக்கும் கட்டிடங்கள் மற்றும் பனிக்கட்ட எதிர்ப்புத் தரும் பைபர் உடைகள் மூலம் தங்களை பாதுகாத்து வாழ்கிறார்கள்.
Finland
ஃபின்லாந்தின் வடபகுதிகளில் வாழும் சாமி இன மக்கள் சுமார் 80,000 பேர் உள்ளனர். இங்கு வெப்பநிலை -40°C வரை இருக்கும்.
இவர்கள் ஆண்டு முழுவதும் 200 நாட்களுக்கு மேல் நீடிக்கும் பனிக்காலத்தை சமாளிக்க, சிறப்பு வாழ்க்கை முறைகளை பின்பற்றுகிறார்கள்.
ஐஸ்லாந்து
ஐஸ்லாந்தில் சுமார் 3.7 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு வெப்பநிலை -20°C வரை இருக்கும்.
இங்கு வீடுகள் பெரும்பாலும் geothermal (நிலத்தடி வெப்பம்) மூலம் சூடாக்கப்படுகின்றன.
கஜகஸ்தான்
கஜகஸ்தானில் வாழும் மக்கள் பலர் இன்றும் இடம்பெயரும் வாழ்க்கை முறையிலேயே இருக்கின்றனர். இங்கு வெப்பநிலை -14.5°C (Nur-Sultan), -10.5°C (Aral) இருக்கும்.
மழை, வெப்பம் போன்ற சீரற்ற காலநிலையை தங்கள் பழமையான அறிவு வழியே சமாளிக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |