உலகில் இதுவரை Omicron வைரஸ் எந்தெந்த நாடுகளில் பரவியுள்ளது தெரியுமா? வெளியான முழு விபரம்
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் எந்தெந்த நாடுகளில் பரவியுள்ளது என்ற விபரம் வெளியாகியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ், பல்வேறு விதங்களில் உருமாறி, ஒவ்வொரு நாடுகளிலும் பரவி வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வகை கொரோனா வைரஸ் டெல்டா என்று கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்னும் சில நாடுகளில் வெவ்வேறு வகை கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவில் அதிக ஆபத்து கொண்ட கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸிற்கு Omicron என உலகசுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இது மிகவும் எளிதாகவும், இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் பாதிப்பதாக கூறப்படுவதால், உலக நாடுகள் கடும் பீதியில் உள்ளனர்.
இதையடுத்து தற்போது இந்த வைரஸ் எந்தெந்த நாடுகளில் பரவியுள்ளது என்ற விபரம் வெளியாகியுள்ளது.
அதன் படி, தென் ஆப்பிரிக்காவில் 88 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், Botswana-வில் 6 பேர், பிரித்தானியாவில் 2 பேர், ஹொங்ஹொங்கில் 2 பேர், இத்தாலி, இஸ்ரேல், பெல்ஜியம், மற்றும் Czech Republic-ல் ஆகிய நாடுகளில் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மொத்தம் தற்போது வரை இந்த வைரஸால் 102 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.