குழந்தைகள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை - எந்தெந்த நாட்டில் தெரியுமா?

Australia Brazil Malaysia India Social Media
By Karthikraja Jun 06, 2026 06:28 AM GMT
Report

குழந்தைகள் சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்துவதன் காரணமாக பல்வேறு மன மற்றும் உடல் நலன் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள், சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அல்லது முற்றிலுமாகத் தடைசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

உலகின் எந்தெந்த நாடுகளில் சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

குழந்தைகள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை

அவுஸ்திரேலியா முதல் நாடாக 2025 ஆம் ஆண்டில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை அமுல்படுத்தியது. 

குழந்தைகள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை - எந்தெந்த நாட்டில் தெரியுமா? | Which Countries Introduce Child Social Media Ban

பிரேசில் 2வது நாடாக 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த பெற்றோரின் அனுமதி தேவை என்ற சட்டத்தை கடந்த 17 மார்ச் 2026 அன்று அமுல்படுத்தியுள்ளது. 

3வது நாடாக கடந்த மார்ச் 26 ஆம் திகதி, 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை இந்தோனேஷியா அமுல்படுத்தியது. 

130 கோடி மக்களின் ஓராண்டு நீர் தேவை - AI தரவு மையங்களால் ஏற்பட உள்ள பாரிய பாதிப்பு

130 கோடி மக்களின் ஓராண்டு நீர் தேவை - AI தரவு மையங்களால் ஏற்பட உள்ள பாரிய பாதிப்பு

ஆப்ரிக்கா நாடான காபோன் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி, 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த பெற்றோரின் அனுமதி வேண்டும் என்ற சட்டத்தை அமுல்படுத்தியது.

கடந்த ஜூன் 1 ஆம் திகதி 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை மலேசியா அறிமுகப்படுத்தியது. 

குழந்தைகள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை - எந்தெந்த நாட்டில் தெரியுமா? | Which Countries Introduce Child Social Media Ban

15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் சட்டமாக அமுல்படுத்தப்படவில்லை.

துருக்கியில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Meta AI-யை ஏமாற்றி பல முக்கிய Instagram கணக்குகளை கைப்பற்றிய ஹேக்கர்கள்

Meta AI-யை ஏமாற்றி பல முக்கிய Instagram கணக்குகளை கைப்பற்றிய ஹேக்கர்கள்

டென்மார்க், ஆஸ்திரியா, ஜேர்மனி, போலந்து, சுலோவீனியா, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா ஆகிய பல்வேறு நாடுகளில் பொதுவாக 14-16 வயதினரை இலக்காகக் கொண்டு, இதேபோன்ற சட்டங்களை முன்மொழிவதிலோ அல்லது வரைவு செய்வதிலோ பல்வேறு கட்டங்களில் உள்ளன.

அமெரிக்காவில், புளோரிடா மற்றும் யூட்டா உள்ளிட்ட சில மாநிலங்கள் சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த பெற்றோரின் அனுமதி வேண்டும் என்ற சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் என்ன நிலை? 

இந்தியாவில் சமூக ஊடக பயன்பாட்டிற்கு KYC அடிப்படையிலான பயனர் அங்கீகாரம் மற்றும் வயது சரிபார்ப்பு மேற்கொள்ள உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. 

குழந்தைகள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை - எந்தெந்த நாட்டில் தெரியுமா? | Which Countries Introduce Child Social Media Ban

கர்நாடகாவில் 2026-27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அப்போதைய முதல்வர் சித்தராமையா, கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து ஆந்திராவிலும், 90 நாட்களுக்குள் 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

கோவாவிலும், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடையை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக கோவா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரோஹன் காண்டே தெரிவித்துள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US