பிரித்தானியாவிடமிருந்து முதலில் சுதந்திரம் பெற்ற நாடு - இன்று உலகின் பெரிய வல்லரசு
பிரித்தானியாவிடமிருந்து முதலில் சுதந்திரம் பெற்ற நாடு,இன்று உலகின் பெரிய வல்லரசு நாடாக உள்ளது.
பிரித்தானியாவின் ஆதிக்கம்
16 ஆம் நூற்றாண்டில், உலகின் சக்தி வாய்ந்த நாடாக பிரித்தானியா இருந்து வந்தது. சுமார் 50 க்கும் மேற்பட்ட நாடுகளை பிரித்தானியா தனது ஆளுகையின் கீழ் வைத்திருந்தது.
இதன் மூலம், தனதுமொழி கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களை உலகம் முழுவதும் பரப்பியது.
தற்போது அனைத்து நாடுகளும் சுதந்திரம் பெற்று அதன் இறையாண்மையுடன் ஆட்சி செய்து வந்தாலும், பிரித்தானியா தற்போதும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது.
ஆனால், பிரித்தானியாவிடமிருந்து முதலில் சுதந்திரம் பெற்ற நாடு, இன்று பிரித்தானியாவை விட பலம் வாய்ந்த நாடாக உள்ளது.
அமெரிக்கா
பிரித்தானியாவின் ஆளுகையின் கீழ் இருந்த அமெரிக்கா, 1776 ஆம் ஆண்டு முதல் நாடாக சுதந்திரம் பெற்றது.
1776 ஜூலை 4 ஆம் திகதி, அமெரிக்கா தனது சுதந்திர பிரகடனத்தை அறிவித்தது.
1783 ஆம் ஆண்டில் பாரிஸ் ஒப்பந்தம் மூலம், அமெரிக்காவின் சுதந்திரத்தை பிரித்தானியா அங்கீகரித்தது.
இன்று, பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளில் பிரித்தானியாவை விட வளர்ச்சியடைந்துள்ள அமெரிக்கா, உலகின் பெரும் வல்லரசாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
பல ஆண்டுகளாக பிரித்தானியாவுடன், அமெரிக்கா நல்ல உறவை பேணி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |