உலகில் அதிக போர்களில் ஈடுபட்டுள்ள நாடு - அமெரிக்கா, பிரித்தானியா இல்லை
மன்னராட்சி முதல் தற்போதைய ஜனநாயக ஆட்சி முறை வரை போர்கள் என்பது மாறாமல் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது.
அரசுகள் தங்கள் எல்லையை விரிவாக்கம் செய்வது, இறையாண்மைக்கு அச்சுறுத்தல், வணிகம், வளங்கள் என பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்து போரினை நடத்தி வருகின்றன.
தற்போது கூட, ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போர் நடைபெற்று வருகிறது.

அதிக போரில் பங்குபெற்றுள்ள நாடு
ஆனால், எந்த நாடு அதிகமான போரில் ஈடுபட்டது என கேட்டால் தற்போது பெரும்பாலானோர் அமெரிக்காவை கூறுவார்கள்.
காரணம் அதன் ராணுவ வலிமை. பிரித்தானியா சில தசாப்தங்களுக்கு முன்னால் உலகின் பெரும் பகுதிகளை ஆண்டு வந்ததால் சிலர் பிரித்தானியா எனக்கூறக்கூடும்.

ஆனால், வரலாற்றில் அதிக போரில் ஈடுபட்ட நாடு எது என்றால், பிரான்ஸ் எனக்கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
கி.மு. 387 முதல் சுமார் 250 போர்களில் பங்கேற்று, பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது. நூறாண்டுப் போர் முதல் இரு உலகப் போர்கள் வரை, பிரான்ஸ் தொடர்ந்து உலகளாவிய போரில் பங்கு வந்துள்ளது.
இதில், 110 க்கும் மேற்பட்ட முக்கிய போர்க்கள வெற்றிகளைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஜேர்மனி, ஸ்பெயின் இத்தாலி ஆகிய அதன் வரலாற்று போட்டியாளர்களுடன் எல்லையை பகிரும் வகையில் உள்ள பிரான்சின் புவியியல் அமைவிடம், தொடர்ச்சியான பிராந்தியப் பாதுகாப்பிலும் ஆக்ரோஷமான விரிவாக்கத்திலும் ஈடுபடக் கட்டாயப்படுத்தியது.
வரலாற்றிலேயே மிகப்பெரிய காலனித்துவப் பேரரசை நிறுவுவதற்காக ஐரோப்பாவையும் தாண்டி, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகியவற்றிலும் கடுமையான போர் புரிந்துள்ளது.
160 போர்களில் ஈடுபட்டதன் மூலம் பிரித்தானியா 2வது இடத்தில் உள்ளது.
1776 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற அமெரிக்கா, 113 போர்களுடன் 3வது இடத்தில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |