உலகின் பனிப்பொழிவின் தலைநகரம் என்று அழைக்கப்படும் இடம்.., எது தெரியுமா?
பொதுவாக பனிப்பொழிவு அதன் வழியில் எதிர்கொள்ளும் காற்றின் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைப் பொறுத்து பல வடிவங்களில் விழுகின்றது.
குளிர்காலத்தில் பலரும் பனிப்பொழிவை ரசிக்க வெவ்வேறு சிறந்த இடங்களை தேர்வு செய்து சுற்றுலா செல்கிறார்கள்.
அதன்படி, உலகிலேயே அதிகமான பனிப்பொழிவு இருக்கும் இடம் எது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.
அந்தவகையில், உலகின் பனிப்பொழிவு தலைநகரம் என்று அழைக்கப்படும் ஜப்பானின் வடக்கு நகரம் ஆமோரி.
இந்த நகரில் ஆண்டுதோறும் மிக அதிக அளவில் பனிப்பொழிவு பதிவாகுவதால் இதற்கு இந்த சிறப்புப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் வடக்கு நகரமான ஆமோரி பகுதியில் கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
நகரில் 180 செ.மீ வரை பனி பெய்ததால் சுமார் 6 அடி உயரத்திற்கு பனிப்படலம் உருவாகியுள்ளது.
சாலைகள் மற்றும் வீடுகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளன.

இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதுடன், பல இடங்களில் மின்விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக 26 அடி பனி கிடைக்கும் ஆமோரி நகரம், இந்த ஆண்டு ஒரே வாரத்தில் அந்த அளவை எட்டியுள்ளது.
1945ஆம் ஆண்டிற்குப் பிறகு இவ்வளவு கடுமையான பனிப்பொழிவு பதிவாகுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |