உலகின் மிகப்பெரிய நதி தீவு.., இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?
நதி தீவு என்பது ஒரு ஆற்றின் குறுக்கே அல்லது அதன் நடுவில் அமைந்துள்ள நிலப்பகுதியாகும்.
அசாமில் பிரம்மபுத்திரா நதியில் அமைந்துள்ள மஜுலி, உலகின் மிகப்பெரிய மக்கள் வசிக்கும் நதி தீவுகளில் ஒன்றாகும்.
2016ஆம் ஆண்டு இது இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
ஒருகாலத்தில் 800 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாக இருந்த மஜுலி, மண் அரிப்பு மற்றும் அடிக்கடி ஏற்படும் வெள்ளம் காரணமாக தற்போது சுருங்கி வருகிறது.
பசுமையான வயல்கள், ஈரநிலங்கள் நிறைந்த இந்தத் தீவு பல அரிய புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு முக்கிய தாயகமாக உள்ளது.
கலாச்சார ரீதியாக, ஸ்ரீமந்த சங்கர்தேவ் நிறுவிய வைணவ மடங்களான ‘சத்ராக்கள்’ இத்தீவின் அடையாளமாக விளங்குகின்றன.
இந்த சத்ராக்கள் இசை, நடனம், நாடகம் மற்றும் கலைகளைப் பாதுகாக்கும் மையங்களாக இன்றும் செயல்பட்டு வருகின்றன.

மஜுலி மக்களின் வாழ்வாதாரம் விவசாயம், மூங்கில் கைவினை மற்றும் பாரம்பரிய நெசவுத் தொழிலை சார்ந்துள்ளது.
இங்கு கோமல் சவுல் போன்ற தனித்துவமான அரிசி வகைகள் பயிரிடப்படுகின்றன.
இதுதவிர, மூங்கில் கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய நெசவுத் தொழில் இங்கு மிகவும் பிரபலமானது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |