உலகத்தின் மிகப்பெரிய தங்க நாணயம் எந்த நாட்டில் செய்யப்பட்டது தெரியுமா?
உலகத்தின் மிகப்பெரிய தங்க நாணயம் எந்த நாட்டில் செய்யப்பட்டது என்பது குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகின் பெரிய தங்க நாணயம்
தங்கத்தின் விலை ராக்கெட் போல் உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இதனால் முதலீட்டாளர்களுக்கு தங்கமானது முக்கிய தேர்வாக மாறிவிட்டது.
மனித நாகரிகம் துவங்கியது முதல் இதுவரை 1,87,200 டன் தங்கம் சுரங்கங்களில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மிகப்பெரிய தங்க சுரங்கங்கள் பூமிக்கு அடியில் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
தங்கம் அனைத்தையும் 5 மைக்ரான் தடிமன் கொண்ட ஒரு வயராக பூமியின் மீது பரப்பினால் 1.12 கோடி முறை வட்டமிடும் என்று சொல்லப்படுகிறது. அதாவது பூமியின் குறுக்களவு என்பது 12,756 கிலோ மீட்டர்கள் மட்டுமே.
தங்கத்தை உருக்கும் போது அது ஒவ்வொரு பக்கத்திலும் 21 மீட்டர் கொண்ட ஒரு கன சதுரம் கொண்டதாகவே இருக்கும். இது வலிமைக்கு பெயர் பெற்றது.
உலகத்தின் மிகப்பெரிய தங்க நாணயமானது அவுஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் செய்யப்பட்டதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தின் குறுக்களவு 80 சென்டிமீட்டர் ஆகும்.
தங்கத்தில் வளைந்து கொடுக்கும் தன்மை இருப்பதால் 28 கிராம் தங்கத்தை 5 மைக்ரான் தடிமன் கொண்ட ஒரு வயராக 50 மைல்களுக்கு நீட்டிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |