உலகின் சபிக்கப்பட்ட இந்திய நதி.., விவசாயத்திற்கு கூட பயன்படுத்துவதில்லை: எங்குள்ளது?
பொதுவாக, இந்திய நாட்டில் நதிகளை தெய்வங்களாகக் கருதப்படுகின்றன.
கங்கை, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற நதிகளை மக்கள் மிகுந்த பக்தியுடன் வழிபடுகிறார்கள்.
அதேபோல், புனிதமாக கருதப்படும் இந்த நதிகளில் நீராடுவது பாவங்களைக் கழுவி, புண்ணியங்களைத் தரும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில், புராணத்தின் படி இந்தியாவில் உள்ள ஒரு நதி சபிக்கப்பட்ட நதியாக கருதப்படுகிறது.
இந்நதியின் தண்ணீரை குடித்தாலும், குளித்தாலும் பிரச்சனையில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் தலைமுறை தலைமுறையாக நம்பி வருகிறார்கள்.
இந்தியாவின் அசுத்தமான நதி என்று கூறப்படும் கர்மனாசா நதி தான் சபிக்கப்பட்ட நதியாக அப்பகுதி மக்களால் கருதப்படுகிறது.
இந்த நதியின் நீர் வழிபாடு, குளித்தல் அல்லது விவசாயத்திற்கு கூட பயன்படுத்தப்படுவதில்லை.

கர்மனாசா நதி கைமூர் மலைகளின் அதௌரா பகுதியில் உருவாகி பக்ஸரில் கங்கையுடன் இணைகிறது.
192 கி.மீ நீளமுள்ள இந்த நதி அதன் மேற்குக் கரையில் உத்தரப்பிரதேச மாவட்டங்களாலும், கிழக்குக் கரையில் பீகார் மாவட்டங்களாலும் சூழப்பட்டுள்ளது.
சபிக்கப்பட்ட நதியாக இது விளங்கினாலும், இது கங்கை நதியுடன் இணைந்து புனிதமாகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |