போக்குவரத்து சிக்னல் இல்லாத இந்திய முதல் நகரம்: குவியும் மாணவர்கள்: காரணம் இதுதான்!
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள கோட்டா(Kota) நகரம் துடிப்பான இந்தியாவின் பரபரப்பான கல்வி மையமாக திகழ்ந்து வருகிறது.
போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வருகை காரணமாக, கனரக வாகனங்கள் மற்றும் பிற போக்குவரத்து நகர்வுகள் குறித்த நகர்ப்புற திட்டமிடல் மாதிரியை கோட்டா வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் நாட்டின் முதல் போக்குவரத்து இல்லாத நகரமாக கோட்டா அமைந்துள்ளது.
புத்திசாலித்தனமாக திட்டமிடல்
கோட்டா நகரத்தில் போக்குவரத்து சிக்னல்கள் இல்லாமல் இருப்பது தற்செயலான செயல் இல்லை.
இந்த நகரத்தின் அதிகாரிகள் இதற்கான நேர்த்தியான திட்டமிடலை மேற்கொண்டுள்ளனர். வாகனங்கள் சந்திக்கும் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளை அகலப்படுத்துதல், பாதைகளை மாற்றியமைத்தல், திருப்பங்கள், மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் ஆகியவை கொண்டு வலையமைப்பு செய்துள்ளனர்.
இந்த புத்திசாலித்தனமான அணுகுமுறை சாலைகளில் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்கின்றன.

அரசின் அர்ப்பணிப்பு
நகரின் அரசு நிர்வாகம், இரண்டு டஜன்களுக்கு அதிகமான மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளை அமைத்து இந்த மாற்றத்தை கட்டமைத்துள்ளனர்.
இதன் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் பயிற்சியை சரியான நேரத்தில் பெற வழிவகை செய்துள்ளது.
நகரை மேம்படுத்துதல் திட்டத்தின் மூலம் நகரின் முக்கியமான மற்றும் போக்குவரத்து சிக்கல் நிறைந்த ஏரோட்ரோம் சதுக்கம், கோபரியா பவாடி சதுக்கம், காண்டாகர் சதுக்கம் ஆகியவை தற்போது எரிச்சலூட்டாத அமைதியான பயண அனுபவத்தில் நகர்கிறது.

முன் மாதிரியான கோட்டா நகரம்
கோட்டா நகரத்தின் இந்த சாதனை உள்ளூர் வெற்றியாக மட்டுமல்லாமல், நெரிசல் நிறைந்த இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் முன்மாதியாக அமைந்துள்ளது.
புத்திசாலித்தனமான உள்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் மூலோபாய நகர்ப்புற திட்டமிடல் ஆகியவை நீடித்த போக்குவரத்து பிரச்சனைகளை தீர்க்கும் என்பதை கோட்டா நகரம் நிருபித்துக் காட்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |