உலகில் மிகவும் பழமையான மொழி.., எது தெரியுமா?
மனிதன் வேட்டை சமூகமாக வாழ்ந்த காலத்திலேயே ஒலியையும், ஓவியத்தையும், கிறுக்கல்களையும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தியுள்ளான்.
அதன் பிறகு மனிதனின் மொழியில் கிறுக்கல்கள் முக்கிய இடம் பிடித்து, தான் பேசிய சொற்களுக்கான எழுத்து வடிவங்களை வகுத்தான்.
இந்த எழுத்துக்கள் பிராமி, தமிழி என பரவலாக அறியப்படுகிறது.
இந்தியத் தொல்லியல் துறையில், சிந்து சமவெளி அகழாய்வு முக்கிய அகழாய்வாக இருந்து வருகிறது.
சிந்துவெளி அகழாய்வில் எழுத்து வடிவங்கள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன.
இதுவரை கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், தமிழும் சமஸ்கிருதமும் பழங்கால மொழிகள் என வகுக்கப்பட்டுள்ளன.
இதில், சமஸ்கிருதம் பொது பயன்பாட்டில் இருந்து வழக்கொழிந்துள்ள நிலையில், தமிழ் காலத்திற்கு ஏற்ப அதனை தகவமைத்து தொடர்ந்து பயன்பாட்டு மொழியாக இருந்து வருகிறது.
பொதுவாக உலகின் பழமையான மொழிகளாக தமிழ், சீனம், சமஸ்கிருதம், கிரேகம், ஹீப்ரு மற்றும் எகிப்திய மொழி உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில், தமிழ் மொழி 5000 ஆண்டுகள் பழமையானதாக இருந்து வருகிறது என தற்போது கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் இன்னும் பல ஆயிரம் ஆண்டு காலம் பிந்தைய மொழியாக இருக்கலாம் என்றும் மொழியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், உலகில் பழமையான மொழியாக அறியப்படும் சமஸ்கிருதமும் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி என சொல்லப்படுகிறது.
ருப்பினும் இது கி.மு. 600ஆம் ஆண்டு வாக்கில் பொது பயன்பாட்டில் இருந்தும், வழக்கத்தில் இருந்தும் விலகி வழிபாட்டு மொழியாக மாறிவிட்டது என்பது வல்லுநர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
3000 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு மொழி, கி.பி 400ஆம் ஆண்டுக்கு பிறகு வழக்கொழிந்தது. இந்த மொழியும், யூதர்களால் வழிபாட்டு மொழியாக மட்டுமே இருந்து வருகிறது.
ஆனால், 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் சியோனிசத்தின் தோற்றத்துடன், ஹீப்ரு மறுமலர்ச்சி பெற்று இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ மொழியாக தற்போது இருந்து வருகிறது.
கிரேக்க மொழி தோராயமாக 2,900 ஆண்டுகள் பழமையானது என அறியப்பட்டுள்ளது. கிரேக்கத்திலும், ஆசியாவின் சிறு பகுதியிலும் கிரேக்க மொழி பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும், இந்தோ - ஐரோப்பிய மொழிகளிலேயே கிரேக்கம் மொழி ஏறத்தாழ 3000 ஆண்டு காலமாக எழுத்து மொழியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |