இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் தமிழகத்தில் தான் உள்ளது: எது தெரியுமா?
பொதுவாக இந்திய ரயில்வே பயணிகளின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் பொதுவாக பலரும் ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
இந்தியாவில் மொத்தம் 7349 ரயில் நிலையங்கள் உள்ளன. தினமும் சுமார் ரயிலில் 2.5 கோடி மக்கள் பயணம் செய்கின்றன.
இந்தியாவின் மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் என்றால் நாம் உத்தரப் பிரதேசம், பீகார் என்று நினைத்திருப்போம்.
ஆனால் இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான ரயில் நிலையம் தமிழகத்தில் தான் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.
அந்தவகையில், தற்போது இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான 10 ரயில் நிலையங்களின் பட்டியலை பார்க்கலாம்.
இந்த பட்டியல் இந்திய தரக் கவுன்சில் (QCI) வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
இந்த பட்டியல் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் தூய்மையின் அடிப்படையில் தரவரிசைப்படுத்த 1.2 மில்லியன் பயணிகளின் கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
அசுத்தமான 10 ரயில் நிலையங்கள்
1. இந்தியாவிலேயே அசுத்தமான ரயில் நிலையங்களில் தமிழ்நாட்டில் உள்ள பெருங்களத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது.
2. இரண்டாவது இடத்தில் தமிழ்நாட்டில் உள்ள கிண்டி ரயில் நிலையம் உள்ளது.
3. மூன்றாவது இடத்தில் டெல்லி சதர் பஜார் ரயில் நிலையம் உள்ளது.
4. நான்காவது இடத்தில் தமிழ்நாட்டில் உள்ள வேளச்சேரி ரயில் நிலையம் உள்ளது.
5. ஐந்தாவது இடத்தில் தமிழ்நாட்டில் உள்ள கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் உள்ளது.
6. ஆறாவது இடத்தில் தமிழ்நாட்டில் உள்ள சிங்கபெருமாள்கோயில் ரயில் நிலையம் உள்ளது.
7. ஏழாவது இடத்தில் கேரளா மாநிலத்தில் உள்ள ஒட்டப்பாலம் ரயில் நிலையம் உள்ளது.
8. எட்டாவது இடத்தில் தமிழ்நாட்டில் உள்ள பழவந்தாங்கல் ரயில் நிலையம் உள்ளது.
9. ஒன்பதாவது இடத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா கோர்ட் ரயில் நிலையம் உள்ளது.
10. பத்தாவது இடத்தில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள குர்ஜா ரயில் நிலையம் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |