இந்தியாவிலேயே மிகவும் அழுக்கான ரயில்.., எது தெரியுமா?
பொதுவாக இந்திய ரயில்வே பயணிகளின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் பொதுவாக பலரும் ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
இந்தியாவில் மொத்தம் 7349 ரயில் நிலையங்கள் உள்ளன. தினமும் சுமார் ரயிலில் 2.5 கோடி மக்கள் பயணம் செய்கின்றன.
அந்தவகையில், இந்தியாவிலேயே மிகவும் அழுக்கான ரயில் எது என்பது குறித்து பார்க்கலாம்.

சமீபத்தில், வீடியோ ஒன்றில் உஜ்வால் சிங் என்பவர், ரயிலில் உள்ள அழுக்கை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
ரயிலின் கழிப்பறைகள், கை கழுவும் இடம் என முழுக்க முழுக்க துர்நாற்றம் நிரம்பி இருந்த இந்த ரயில் திப்ருகார் - கன்னியாகுமரி இடையே செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ்தான்.
4,000 கி.மீ. தொலைவைக் கடக்கும் இந்த ரயில் 9 மாநிலங்கள் வழியாகப் பயணிக்கிறது.
பயணிகள் மற்றும் சமூக வலைதளவாசிகளின் புகார்களின் அடிப்படையில், இந்தியாவின் சில ரயில்கள் மிகவும் அழுக்கானவை எனப் பட்டியலிடப்படுகின்றன.

இது குறித்து இந்திய ரயில்வேக்கு, 100,280 புகார்கள் மற்றும் பிரச்சனைகள் ஹெல்ப்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே, இவ்வகை அழுக்கான ரயில்கள் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தரவையும் வெளியிடவில்லை.
உஜ்வால் சிங் பகிர்ந்த வீடியோவின் அடிப்படையில், மக்கள் இதனை இந்தியாவின் மிகவும் அழுக்கான ரயில் என குறிப்பிடுகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |