இந்தியாவிலேயே அதிவேகமாக செல்லும் ரயில் எது தெரியுமா?
இந்தியாவில் பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் ரயில் துறைக்கு பெரிய பங்கு உள்ளது.
குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம், அதிவேகத்தில் செல்லக் கூடியது என்பதால் சாமானிய மக்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
அந்தவகையில், இந்தியாவின் அதிவேகமாக செல்லும் ரயில் எது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
அதன்படி, இந்தியாவின் புதிய semi-high-speed ரயில், ரயில் 18 ஆகும். இது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் ரயில் 18 வடிவமைக்கப்பட்டுள்ளது.
பலவிதமான மேம்பட்ட அம்சங்களை கொண்ட இதில் நவீன குளிரூட்டப்பட்ட பெட்டிகள், தானியங்கி டச்-ஃப்ரீ கதவுகள், வேகம் மற்றும் இருப்பிடம் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.
மேலும், பயணிகள் தடையில்லா வைஃபை மற்றும் ஆன்போர்டு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும் அனுபவிக்க முடியும்.
இந்த ரயிலில் bio-vacuum கழிப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் உணவு மற்றும் பானங்களை சூடாக்குவதற்கும் குளிரூட்டுவதற்குமான அதிநவீன வசதிகள் உள்ளது.
மணிக்கு 160-200 கிமீ வேகத்தை எட்டும் திறனுடைய இந்த ரயில் பயணிகளின் பயண நேரத்தை 15% குறைகிறது.
முழு குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன், எக்ஸிகியூட்டிவ் மற்றும் நிலையான நாற்காலி கார்களில் விசாலமான இருக்கைகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |