இந்தியாவிலேயே முதலில் தோன்றிய மாவட்டம் தமிழகத்தில் தான் உள்ளது.., எது தெரியுமா?
தமிழ்நாடு அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்காகப் புகழ்பெற்றது.
மொத்த 130,058 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தமிழகம் 1956ஆம் ஆண்டு உருவானது.
இருப்பினும், தமிழ்நாடு என்ற பெயர் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டது.
ஆரம்பத்தில் வெறும் 13 மாவட்டம் மட்டுமே உள்ள தமிழகம் தற்போது 38 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலேயே முதலில் தோன்றிய மாவட்டம் தமிழகத்தில் தான் உள்ளது என்பது பலரும் அறிந்திடாத ஒரு விடயம்.
அந்தவகையில், இந்தியாவிலேயே முதலில் தோன்றிய மாவட்டம் தமிழகத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டம் தான்.
இந்தியாவின் முதல் மாவட்டமாக சேலம் 1792ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.
தற்போது உள்ள மாவட்டங்களான நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி மொத்தம் 7530 சதுர கி.மீ கொண்ட பகுதியாக சேலம் மாவட்டம் இருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் திகதி சேலம் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சேலத்தில் மேட்டூர் அணை, ஏற்காடு மலை என பல சுற்றுலாவிற்கு சிறப்புமிக்க இடங்கள் அமைந்துள்ளன.
அதேபோல் கோட்டை மாரியம்மன் கோவில், முத்துமலை முருகன் கோவில் என பல பிரபலமான கோவில்களும் அமைந்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |